இமாம் ஜஷபர் ஸாதிக் அவர்கள் அருளிய         

                    மஸ்ஜிதுன் நபவியில்

முஹம்மத் பின் சினான் என்பவரின் அறிவிப்பின் படி அல் முபழ்ழல் பின் உமர் பின்வருமாறு கூறுகிறார்:

ஒரு நாள் அஸர் தொழுகைக்குப் பின் நபியவர்களின் அடக்கஸ்தலத்திற்கும் மிம்பர் மேடைக்கும் மத்தியில் அமர்ந்திருந்தேன்.அல்லாஹ் நமது கருணை நபியவரகள்; மீது அருளி இருக்கும் சிறப்பையும் கண்ணியத்தையும் உயர்வையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.அன்னாரது மகத்துவத்தையும் நற்குணங்களையும் மகத்தான அந்தஸ்தையும அவர்களது உம்மத்தினN;ர உணரவில்லையே என்ற ஆதங்கத்தில் மூழ்கி இருந்தேன்.

அப்போது இப்னு அபில் அவ்ஜா என்ற நாஸ்திக அறிஞர் அங்கு வந்தார். வந்தவர் எனக்கருகில் அமர கூட வந்த அவரது நண்பர் ஒருவரும் சற்று விலகி அமர்ந்தார். பெருமானாரின் கப்ரைச் சுட்டிக் காட்டியவாறு 'இந்த மண்ணறையில் குடி கொண்டிருப்பவர் அவரது எண்ணிலடங்காத சாதனைகளின் காரணமாக இணையற்ற புகழையும் உயர்வையும் அடைந்து விட்டார்'. என்று இப்னு அபில் அவ்ஜா கூறினார்.

அதை உறுதிப் படுத்துவது போல அவரது நண்பரும் 'அவர்(முஹம்மத்) ஒரு தத்துவ ஞானியாகத் திகழ்ந்தார். அவர் பகுத்தறிவை நிலைகுலையச் செய்யத்தக்க பிரமாண்டமான சிந்தனைகளை முன்வைத்தார். போலிப் பண்டிதர்கள் மனித சிந்தனையின் ஆழத்திற்கே சென்று அதன் மர்மங்களை இனங்காண முற்பட்டனர். ஆனால் எல்லாம் வீணிலேயே முடிந்தன. அவரது தூது பண்பட்ட கல்விமான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட போது பொதுமக்களும் சாரி சாரியாக அவரது நம்பிக்கையை ஏற்றனர்.

அவருடைய தூதை ஏற்ற இடங்களில் வணக்கஸ்தலங்களும் பள்ளிவாசல்களும் உருவாகின. அவரது பெயரை சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் பெயருடன் இணைத்து மலைகள்,சமுத்திரங்கள்,காடு,மேடு என்ற பேதமின்றி கடந்து சென்று ஒரு நாளைக்கு ஐந்து நேரம் பாங்கோசையாகவும் இகாமத்தாகவும் கூறிப் பறை சாற்றி அவரது நினைவும் அவர்களது பணியின் மும்முரமும் மங்காமல் மறையாமல் இருக்கும் படி செய்தார்'.என்று கூறினார்.

இடைமறித்த இப்னு அபில் அவ்ஜா 'முஹம்மதின் விடயத்தை விட்டுத் தள்ளும்.அவரை நினைக்கும் போது எனது சிந்தனை பேதளித்து பகுத்தறிவு திகைப்படைகிறது. நாம் பேச வேண்டிய விடயத்தைப் பேசுவோம்'எனத் தொடர்ந்தார்.

பிறகு அவர் அகிலத்தில் உள்ள வஸ்துகளின் மூலத்தைப் பற்றிப் பேசலானார். இவற்றை யாரும் படைக்கவில்லை எனவும், படைத்தவன்,வடிவமைத்தவன், சீரமைத்தவன் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்றும் யாவும் தானே உருவாகியதென்றும் அவை முடிவும் அழிவும் இன்றி நிரந்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் என்றும் வாதிட்டார்.

இப்னு அபில் அவஜாவுடன் தர்க்கம்.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 next