ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது என்ன? எனது அஹ்லுல் பைத்தா அல்லது எனது சுன்னாவா?ஹதீஸ் விற்பன்னர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஹதீஸுத் தகலைன் கிரந்தத்தில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பின் வரும் ஹதீஸ் ஒன்று உள்ளது.

உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு பொருட்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது எனது சந்ததியினர். நீங்கள் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவர மாட்டீர்கள்.

எவ்வாராயினும் சில அறிவிப்புகளில் எனது சந்ததியினர் என்பதற்கு பதிலாக எனது சுன்னா (நடை முறைகள்) என சொல்லப் பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு அறிவிப்புகளில் எது சரியானது? என்பது ஒரு கேள்வியாக உள்ளது. இவ்விடயம் தொடர்பாக பல அறிஞர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவற்றுள் மிகச் சுருக்கமானது கெய்ரோவில் பிரசுரிக்கப்பட்ட தாருத் தக்ரீப் பைனல் மதாஹிபில் இஸ்லாமிய்யா என்பதாகும். அண்மையில் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த நவீன கால ஹதீஸ் கலை விற்பன்னர்களில் ஒருவரான ஷெய்க் ஹஸன் பின் அலி சக்காப் என்ற ஜோர்தானிய அறிஞர் ஒருவர் இக் கேள்விக்கு விடையளித்துள்ளார். ஆந்த கட்டுரை ஆய்வு அடிப்படையில் அநை;துள்ளதால் அதன் மொழி பெயர்ப்பை நாம் உங்களுடன் பகிரந்து கொள்கின்றோம்.

கேள்வி: ஹதீஸுத் தகலைனில் வரும் அந்த இரண்டு கூற்றுகளுள் எது சரியானது ? என என்னிடம் கேட்கப் படுகிறது. அது எனது சந்ததி - எனது அஹ்லுல் பைத் என்ற சொல்லமைப்பா அல்லது எனது சுன்னா என்ற சொல்லமைப்பா? துயவு செய்து அந்த ஹதீஸின் மூலத்தைப் பற்றி சிறிது விளக்குங்கள்.

பதில்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த சரியானதும் நம்பகமானதுமான ஹதீஸ் எனது அஹ்லுல் பைத்தும் என்ற பதத்தையே கொண்டுள்ளது. எனது அஹ்லுல் பைத் என்பதற்கு பதில் எனது சுன்னா என்றிருந்தால் அதன் ஸனத் (அறிவிப்பாளர் வரிசை) கருத்தோட்டத்தின்படி அது பிழையானதாகும்.

   

நாம் இந்த இரு கூற்றுகளினதும் அறிவிப்பாளர் வரிசையை சற்று அவதானித்தால்  எனது சந்ததி என்ற கூற்று முற்றிலும் நம்பகமானதும் செல்லுபடியானதுமாகும் என்பதும் ஏனைய கூற்றுகள் முற்றிலும் பிழையானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்பதும் நன்கு விளங்கும்.

எனது அஹ்லுல் பைத்தும் என்ற கூற்றின் ஸனத்

எனது அஹ்லுல் பைத்தும் என்ற சொற்றொடரைக் கொண்ட ஹதீஸை இரண்டு பிரபல ஹதீஸ் விற்பன்னர்கள் மேற் கோள் காட்டியுள்ளனர்.

1) இமாம் முஸ்லிம் தனது சஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் ஒரு நாள் இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கும் இடையிலுள்ள கதீர் கும் என்ற இடத்தில் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள் என ஸயித் பின் அர்க்கம் கூறியதாக குறிப்பிடுகிறார் அப்பிரசங்கத்தில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்த பின் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.1 2 3 4 5 next