தீர்வு ஒன்றே - யூசுப் கர்ழாவி(கலாநிதி யூசுப் கர்ழாவி அவர்கள், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்ட போது, இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கான சர்வதேச மன்றம் வெளியிடும் றிஸாலதுத் தக்ரீப் எனும் அரபு சஞ்சிகைக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம் (றிஸாலதுத் தக்ரீப் - Vol 05 - No 19-20)


பதிப்புரை

யுத்தம், பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவம், மதத் தீவிரவாதம், வறுமை, சுயநலமிக்க ஆட்சியாளர்கள், உட்பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள், கழுத்தறுப்புகள், மோசடி, கடத்தல், தீவிர மேற்கத்திய மோகம், வரட்டுத்தனம் என நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு இன்று உதாரணமாக காட்டப்படுவது முஸ்லிம்கள் தான் என்பது துரதிர்ஷ்டவசமான ஓர் உண்மை.

இன்றைய உலகின் இதயமெனக் கருதப்படும் எண்ணெய் வளத்தை தன் கையில் கொண்டுள்ள முஸ்லிம் உலகு, பலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் அரை நூற்றாண்டுக்கு மேலாக திக்குமுக்காடுகிறது. பிரித்தாளும் சக்திகளின் சதிகளின் அங்கமாக அது மாறியுள்ளது. நூற்று முப்பது கோடி மக்களும் நூற்றுக்கணக்கான நாடுகளும் இருந்தும் தலைநிமிர்ந்து வாழும் திராணியற்றுத் துவண்டுபோயுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி முஸ்லிம் சமுதாயம் எல்லா விதமான வேற்றுமைகளுக்கு அப்பால் சென்று ஒற்றுமையைப் பேனுவதே எனத் தீர்க்கமாகச் சொல்லியுள்ளார் பேராசிரியர் யூஸுப் கர்ளாவி அவர்கள்.

இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளுக்கிடையே நல்லிணக்கத்துக்கான சர்வதேச மன்றத்தின் சஞ்சிகைக்கு அன்னார் அளித்த பேட்டியின் தமிழ் வடிவத்தை 'தீர்வு ஒன்றே' எனும் தலைப்பில் வெளியிடக்கிடைத்தமை பற்றி இஸ்லாமிய கலாச்சார நிலையம் பெருமிதம் அடைகிறது.

இச்சிறு பணியில் நமக்கு உதவிய அனைவரது பங்களிப்புகளையும் இறைவன் அங்கீகரிப்பானாக.

இஸ்லாமிய கலாச்சார நிலையம். (ICC)

Islamic cultural centre,

Alim Road, meeravodai-04,1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 next