உஸ்மான் இப்னு ஹுனைப் என்பவருக்கு இமாம் அலி (அலை) அவர்கள் வரைந்த வரலாற்று முக்கியத்துவ மடல்ஹுனைபின் மகனே! புஸராவைச் சேர்ந்த ஒரு செல்வந்தன் உம்மை தன் விருந்தினராக அழைத்த வேளையில் அவ்விருந்தில் கலந்துகொள்ள நீர் விரைந்து சென்றீர். அங்கு பலவகையான உணவுகள் பெறுமதிமிக்க பாத்திரங்களில் உமக்கு முன் வைக்கப்பட்டன. ஏழைகளைப் புறக்கணித்து, தனவந்தர்களை மாத்திரம் அழைத்த ஒரு கூட்டத்தின் அழைப்பை நீர் ஏற்றுக்கொள்வீர் என நான் நினைத்திருக்கவில்லை.

நீர் உண்ணுகின்ற, அருந்துகின்ற எவ்வுணவாயினும் முதலில் அது ஹராமா, ஹலாலா என்பதை தெளிவாக அறிந்து கொள்! அவற்றில் சந்தேகமானவற்றையும், ஆகாதவற்றையும் தவிர்த்து பரிசுத்தமானவை என பூரண நம்பிக்கை உள்ளவற்றை மட்டுமே உட்கொள்!

பின்பற்றக் கூடிய ஒவ்வொருவரும் தத்தமது தலைவரை முழமையாகப் பின்பற்றி வாழ்வதோடு அவரது ஒளியிலிருந்தும், அறிவிலிருந்தும் பயன்பெறவும் முயல வேண்டும். உங்களுடைய தலைவர் தமது வாழ்வில் இரு பழைய ஆடைகளையும், உணவாக இரு ரொட்டித் துண்டுகளையுமே போதுமாக்கிக் கொள்வார். அவ்வாறு வாழ்வது உன்னால் முடியாதென்பதை உணர்ந்து கொள்! ஆயினும் இறையச்சம், கற்பொழுக்க உணர்வு, மனத்தூய்மை, உண்மை வழியைப் பின்பற்றுதல் முதலான விடயங்களில் உறுதியுடனும், பிறருக்கு உதவும் நற்பண்புடனும் செயற்படு!

இறைவன் மீது ஆணையாக நான் இவ்வுலகிலிருந்து தங்கம், வெள்ளியையோ, பிற செல்வங்களையோ களஞ்சியப்படுத்தி வைக்கவில்லை. என்னுடைய இப்பழைய உடைகளுக்குப் பதிலாக பெறுமதியான வேறு உடைகளைத் தயாரிக்கவில்லை. எனக்குச் சொந்தமாக இப்பூமியிலிருந்து ஒரு சாண் அளவேனும் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வுலகில் சிறிதளவைத் தவிர வேறு எவற்றையும் நான் உணவாக உட்கொள்ளவில்லை. என்பார்வையில் இவ்வுலகம் கருவாளி மரத்த்pலிருந்து முளைக்கும் கசப்பான விதையை விடவும் தாழ்ந்ததாகும்.

எம்மிடம் ஃபதக் எனும் தோட்டம் மாத்திரமே இருந்தது. அதனை ஓரு கூட்டத்தினர் பலாத்காரமாக பறித்துக் கொண்டனர். நாமோ பெருமனதுடன் அதனை விட்டுக் கொடுத்தோம். அது எமது கைகளிலிருந்து சென்றுவிட்டது. இவ்விடயத்தில் இறைவனே மிகச் சிறந்த நீதியாளனாவான்.

எமக்கு ஃபதக்கைப் பற்றியோ, ஃபதக் அல்லாததைப் பற்றியோ என்ன கவலை! ஒவ்வொரு மனிதனும் நாளைய தங்குமிடம் அவனது அடக்கஸ்தலமாகும். ஆதன் ஆழ்ந்த இருளில் மனிதனின் நினைவுகளும், செய்திகளும் அழிந்து மறைந்துவிடும். அடக்கஸ்தலம் என்பது ஒரு குருகிய அளவு கொண்ட குழியாகும். ஆதனை விசாலப்படுத்துவது சாத்தியமற்றது. கையினால் அகலமுரச் செய்தாலும் இறுதியில் களியினாலும் கற்களினாலும் நிரப்பி அதன் இடைவெளிகளை மண்ணினால் இறுகச் செய்வார்கள்.

மறுமை நாள் மிகவும் பயங்கரமும், நடுக்கமும் நிறைந்ததாகும். மனிதர்கள் அச்சமுற்றும் நடுக்கமுற்றும் காணப்படும் அந்நாளில் நான் நடுக்கமின்றி உறுதியாக இருப்பதற்காகவும், பாதுகாப்புடன் அங்கு சமூகமளிப்பதற்காகவும் எனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி இறையச்சத்தின் மூலமாக அதனை பயிற்றுவிக்கின்றேன்.

நான் ஏழ்மையாக இருப்பதைக் கண்ணுற்று உலக இன்பங்களை அடைந்து கொள்ள சக்தியற்றுள்ளேன் எனக் கருதி விடாதே! நூன் விரும்பினால் தூய தேன், உயர்தர கோதுமை, பெருமதிமிக்க வரிப்புகள், உணவுகள், உடைகள் என்பவைகளைத் தயார் செய்து பயன்பெற முடியும். ஆனால் சரீர இச்சை என்மீது ஆதிக்கம் செலுத்தாதிருக்கட்டும். நாம் இங்கு உண்டு மகிழ்ந்து களிப்புற்றிருக்கும் இதேவேளையில், ஹிஜாசில் அல்லது எமன் தேசத்தில் ஒரு ரொட்டித் துண்டையேனும் பெற்றுக்கொள்ள முடியாத ஏழைகள் இருக்கலாம்.

ஒரு பொதும் என் வயிறு நிறைந்து புடைத்திருப்பதை நான் விரும்புவதில்லை என் அருகிலுள்ளவர்கள் வறுமையில் வாடி எரியும் இரைப்பையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது நான் மட்டும் வயிறு நிறைய உண்டு திருப்திகரமாக உறங்க முடியுமா? அல்லது இந்த கவிஞர் கூறுவது போல் இருந்துகொள்ளட்டுமா?

உன் அயலவர்கள் வயிற்றுப் பசியுடன், பசியினால் வயிறு முதுகுடன் ஒட்டிய நிலையிலும் இருக்கும்போது நீ மட்டும் மாராளமாக உண்டு திருப்திகரமாக உறங்குவது உனக்குப் போதுமான மருந்தாகும்.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 next