அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்ஓ..அஹ்லுல் பைத்தினரே உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி வைக்கவும் உங்களை (ப்பாவங்களை விட்டு) முற்றுமுழுதாக தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான்.    அல்குர்ஆன் 33:33

..(நபியே) நீர் கூறும் உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொள்வதைத் தவிர இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை..                          அல்குர்ஆன் 42:23 

நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் வேதம் இரண்டாவது எனது அஹ்லுல்பைத் (குடும்பம்).   இவ்விரண்டையும் நீங்கள் கைக்கொள்ளும் வரை என்றுமே வழிதவற மாட்டீர்கள். (நிச்சயமாக) ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சொன்னார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்.. அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும் அன்னவர்களின் அருமைக் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் அருளும்; பொழிவதாக!

சர்வ வல்லமை பொருந்திய இரட்சகனான அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மானுட வர்க்கத்தினர் நேர்வழியில் நடந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெருவதற்காய் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். அவர்கள் யாவரும் அல்லாஹ்வின் தூதை மானுடர் முன் எத்திவைத்து அவர்களை நேர்வழியின் பால் அழைத்தனர். இந்தத் தூய இறைபணியில் அன்னவர்கள் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி மக்களை நேர்வழிப்பத்தினர்.

  இறை தூதர்களின் தொடரில் இறுதியாக வந்தவர்கள் எமது நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களாவர். இறை தூதை நிறைவு செய்து இறைதூதர்களின் இறுதியாளராய் அவர்களின் முத்திரையாய் வந்தவர்கள் எங்கள் நபிகளார் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள்.

  ஐயாமுல் ஜாஹிலிகள் என்ற நாகரீகம் அடையாத காட்டு மிராண்டிகளான அராபியர்களிடம் இறைதூதை முன் வைக்கும்  சிரமமான பணியில் தமது இன்னுயிரையும் துச்சமென மதித்து ஈடுபட்டார்கள் எங்கள் தூதர் முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள். அனாதையாக ஏழையாக இடையனாக வர்த்தகராக வாழ்ந்த அவர்கள் இறை தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சகிப்புத் தன்மை, தன்னலங்கருதாமை, அர்ப்பண மனப்பாங்கு  என்பவற்றை அணிpகலனாய்க் கொண்டு பணி புரிந்தார்கள் அவர்கள். எதிரிகளின் இன்னல்களை மன அமைதியுடன் சகித்துக் கொண்டார்கள், பட்டினியை பரிவுடன் அனுபவித்தார்கள். கொலை வெறிகொண்ட எதிரிகளின் முன்னிலையிலும் நிலைதளராது பொறுமையுடன் தஃவத் பணி புரிந்தார்கள்.

  இதனால் வாழ்வில் ஏற்றங்கள் பல அவர்களை நாடி வந்தன, உயர்வுகள் தேடி வந்தன, அனாதையாய்ப் பிறந்த அண்ணலார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இறுதியில் அந்த அரபு நாட்டின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராய் மாரினார்கள்.

  இன்பத்திலும், துன்பத்திலும் ஏற்றத்திலும், இரக்கத்திலும் உறுதியாய் நின்ற அவர்களுக்கு உதவியாய் நின்றது அன்னவரின் குடும்பம். அது அஹ்லுல் பைத் எனப்படும் அண்ணலாரின் அருமைக்குடும்பம்.

  அருமை நபிகளார்  ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூய்மையானவர்கள். இறைவனால் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். அன்னவர்களின் முன்னோர்கள் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய தூய்மையாளர்கள்.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 next