முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களது தோழர்கள் ஓர் ஆய்வுஅரேபிய வரலாற்றாசிரியர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹுஅலைஹி வ ஆலிஹிலல்லாஹுஅலைஹி வ ஆலிஹி அவர்களது தோழர்கள் அல்லது ஸகாக்களின் மொத்த எண்ணிக் கையை ஏறக்குறைய 150000 என மதிப்பிட்டுள்ளனர். இங்கு முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களைத் தமது சொந்த கண்களால் கண்ட முஸ்லிம்கள் அனைவரும் அன்னாரது தோழர்கள் அல்லது சகாக்கல் என வரைவிலக்கணப் படுத்தப்படுகின்றனர். உதாரணமாக ஒரு அமெரிக்கன் ஒரு அரசியல் கூட்டத்திலோ அல்லது ஒரு மோட்டார் பவனியிலோ அமெரிக்க ஜனாதிபதியைக் கண்டு கையசைக்கிறான். சிலவேளை ஜனாதிபதியும் அவனைக் கண்டு பதிலுக்கு கையசைத்திருக்கவும் கூடும். ஒருவரையொருவர் காணும் அல்லது கண்டு கொண்டிருக்கும் இந்த செயல் அந்த இருவரையும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆக்கி விடுகிறது என்று கூறுவதைப் போல இது இருக்கிறது.

எமது இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வ ஆலிஹி அவர்களின் விடயத்திலும்  150000  முஸ்லிம்கள் தமது சொந்தக் கண்களால் அன்னாரைக் கண்டிருப்பார்கள் என்பது முற்றிலும் சாத்திய மானதே! ஆனால் அவர்களுள் பெரும்பாலானோர் சிறுவர்களும் இளைஞர்களும் என்பது மனதிலிருத்தவேண்டிய  ஒரு விடயமாகும். மற்றும் மேலும் பலர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய எழுத்தறிவற்ற பாமரர்களாவார்கள். இறைத்தூதரின் அழைப்புப்பணி ஆளுமை  குணவியல்புகள்  அல்லதுஇஸ்லாமிய கோட்பாடுகள், விசுவாசம் என்பவற்றில் மிகக் குறைந்த அறிவையே அவர்கள் பெற்றிருந்தனர். கலிமாவைத் திருப்பி உரைக்கும் அவர்களது ஆற்றலுக்கு அப்பால் அது விரிவடையவில்லை.  ஏனைய சிலர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர்கள் அப்படி செய்ததற்கான நியாயம் கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையிலேயே அவர்களது விசுவாசம் குறித்த சர்ச்சை அவர்களது சமகாலத்தவர்களாலன்றி குர்ஆன் மூலமாகவே எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்த நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். இவர்களிடம் நீர் கூறும் நீங்கள்  நம்பிக்கை கொள்ளவில்லை வேண்டுமானால் நாங்கள் கீழ்படிந்தோம் என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை. 49:14

ஆனால் குர்ஆன் அரபிகளின் விசுவாசம்  தொடர்பாக  சந்தேகப்படுவதுடன் திருப்தி கொள்ளவில்லை. அவர்களைப் பற்றிய மேலும் பல  மறைக்கப் பட்டதகவல்களை தேவையான சந்தர்ப்பங்களில் தெளிவாக விளக்குகிறது. உதாரணமாக, அந்த அரபிகள் இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் இறைததூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களைத் தமது பிடியில் வைத்திருப்பதாக எண்ணினர். தாம் இஸ்லாத்தில் இணைந்தால் அவர்களுக்கு அன்னார் நன்றிக்கடன் பட்டுள்ளதை அங்கீகரிக்குமாறு கூறினர்.

இவர்கள் இஸ்லாத்தை எற்றுக் கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக் காட்டுகிறார்கள்.இவர்களிடம் நீர் கூறும், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக நம்பிக்கைகொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கிறான். நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில் நீங்கள் வாய்மையாளர்களாயிருந்தால்! 49:17

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களின் இன்னும் சில தோழர்கள் அற்ப இலாபத்திற் காகவும் வேடிக்கைகளுக்காகவும் விரைவில் மனசஞ்சலம் கொள்பவர்களாக இருந்தனர். ஒரு வியாபாரத்தை முடித்துக் கொள்வதற்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ பள்ளியில் தொழுத நிலையிலுள்ள இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களை விட்டு நீங்கிவிடுபவர்களாக இருந்தனர். அவர்களைப் பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெருவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்று விட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள் அவர்களிடம் கூறும். அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தை விட சிறந் தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான். 62:11

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களின் உயிரைவிட தன்னுயிரைப் பெரிதென மதிக்கும் மதீனாவாசிகள் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது. அன்னாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில் எவ்வித பட்சாதாபமும் இரக்கமுமின்றி அன்னாரைத் தனியே விட்டு அவர்கள் நீங்கியுள்ளனர். குர்ஆன் அதனைப் பற்றி மிகக் குறிப்பாகக் கூறியுள்ளது.

அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கிவிடுவதும், அவரைப் பொருட்படுத்தாமல் தங்களைப்பற்றியே அதிக அக்கரை கொள்வதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றி வாழும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல! 9:120

முஸ்லிம்களின் முக்கியமான கடமைகளில் ஒன்று ஜிஹாத் அதாவது விசுவா சத்தையும் விசுவாசிகளின் சமுகத்தiயும் பாதுகாப்பதற்கான யுத்தம் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி அவர்களின் அனைத்து தோழர்களும் இதில் சமபங்கு கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுள் சிலர் எதிரிகளுடன் போராடுவதில் குறைந் த அக்கறையே காட்டினர். அவர்களபை; பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறை நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறு ப்பாக இருந்தது. அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறி த்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்தின் பக்கமாக இழுத் துச் செல்லப் படுவது போன்று இருந்தது. 8:5,61 2 3 4 next