ரமழான் மாதத்தின் சிறப்பும் அதில் செய்ய வேண்டிய அமல்களும்எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்!

நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய  குரல்களையும் நுண்ணிய பேச்சையும்  கேட்கிறான்! அவன் கருணை பொழியும் இறைவன். அதிக அளவு உபகாரம் செய்பவன். ஆற்றல் மிக்கவன். தண்டனை வாங்குவதில் கடுமையானவன். உலகிலுள்ள எல்லாவற்றையும் சரியாக நிர்ணயிப்பவன். அழகிய முறையில் அவற்றை இயக்குபவன். சட்ட நெறிகளை வகுத்தவன்!. அவனது ஆற்றல் கொண்டு தான் காற்று சுழல்கிறது! மேகம் செல்கிறது. அவனது நுண்ணறிவு மற்றும் கருணையினால் தான் இரவு - பகல் மாறி மாறிச் சுழன்று வருகின்றது!

இறைவனை - அவனுடைய மாட்சிமை மிக்க ஆற்றல்களுக்காகவும் அழகிய அருட்கொடைகளுக்காகவும் புகழ்கிறேன். அதிக அளவில் அருளை வேண்டுபவன் போல் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்!அவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியான வேறு இறைவன் இல்லை என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்கிற முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி அளிக்கிறேன்.

அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் நபியவர்களின் வாழ்க்கையை உண்மையாக பின் பற்றி வாழ்ந்த உத்தம நபித் தோழர்கள் அனைவர் மீதும் என்றென்றும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக!, அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!

அல்லாஹ்வின் அடியார்களே! அறிந்து கொள்ளுங்கள்: தன் படைப்பினங்களின் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நிறைவான அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவனுடைய படைப்புகளிலும்  நெறிமுறைகளிலும் உள்ள நிறைவான தத்துவங்களை அவன் மட்டுமே அறிவான். படைப்பதிலும் நெறிமுறைகளை வகுப்பதிலும்  அவன் விவேகமானவன்.

மனிதர்களை விளையாட்டுக்காக அவன் படைக்கவில்லை. அவர்களை வெறுமனே விட்டு விடவுமில்லை. ஷரீஅத் - நெறி முறைகளை அவர்களுக்கு வகுத்து அளித்திருப்பது வீணுக்காக அல்ல! மாறாக பெரியதோர் இலட்சியத்திற்காகவே  அவர்களைப் படைத்திருக்கிறான். ஒரு மகத்தான காரியத்திற்காகவே அவர்களை உலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறான்! நேரான வழியை அண்ணல் நபி மூலமும் அன்னார் குடும்பத்தினரான அஹ்லுல்பைத்தினர் மூலமும் அவர்களுக்கு விளக்கிக் கொடுத்திருப்பதும், ஷரீஅத் - நெறிமுறைகளை அவர்களுக்கு வகுத்தளித்திருப்பதும் எதற்காக எனில், அவர்களின் ஈமான் - இறைநம்பிக்கை அதிகரிக்க வேண்டும். அவற்றின் மூலம் அவர்களின் வழிபாடு முழுமை அடைய வேண்டும் என்பதற்காகத் தான்!

ஆம்! அல்லாஹ் மனிதர்களுக்கு வகுத்தளித்த எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் ஒரு நிறைவான தத்துவம் உண்டு. அதனை அறிந்தவர்கள் அறிந்தார்கள். அறியாதவர்கள் அறியாமல் போயினர்! ஏதேனும் வழிபாட்டின் தத்துவத்தை நாம் அறியா திருப்பதன் பொருள், அந்த வழிபாட்டிற்கு எந்;த தத்துவமும் இல்லை என்பதல்ல. மாறாக அல்லாஹ் அதில் வைத்துள்ள தத்துவத்தை அறிவதில் நம்மிடம் குறைபாடு உள்ளது என்பதைத் தான் அது சுட்டிக் காட்டுகிறது.

திண்ணமாக அல்லாஹ் வழிபாடுகளை வகுத்தளித்திருப்பதும் நடைமுறை விவகாரங்களை ஒழுங்குபடுத்தி இருப்பதும் - மனிதர்களைச் பரீச்சித்துப் பார்க்கும் நோக்கத்தில் தான்!  அதாவது யார் இறைவனை வழிபடுகிறார், யார் தன் மனம் போன போக்கிலே தான்தோண்டிதனமாக தன் இச்சைக்கு வழிபடுகிறார் என்று அதன் மூலம் தெளிவாக வேண்டும் என்பதற்காகத் தான்!

இந்த வணக்கவழிபாடுகளையும் அந்த நெறிமுறைகளையும் திறந்த உள்ளத்துடனும், மன நிம்மதியுடனும் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவர்தான் தன் இறைவனை வழிபடக்கூடியவர். இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்படுவதற்காக மன இச்சையைத் துறந்தவர்!

எவர் வணக்க வழிபாடுகளில் தான்  விரும்பும் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறாரோ - தனது விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் ஒத்துவரும் நெறிமுறைகளை மட்டும் பின்பற்றுகிறாரோ அவர் தனது மன இச்சையை வழிபடக் கூடியவராவார். அல்லாஹ்வின் ஷரீஅத்தை வெறுத்தவராவார். தன் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் புறக்கணித்தவராவார்! அத்தகையவர் தனது மன இச்சையைத் தன் தலைவராக ஆக்கினாரே தவிர மனத்தைத் தனது ஆதிக்கத்துக் கீழடங்கிப் போகக் கூடியதாய் ஆக்கவில்லை! தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைய வேண்டும் எனும் வகையில் அல்லாஹ்வின் ஷரீஅத்தை  ஆக்கி விட்டார். அவரது அறிவு குறைபாடு உடையதாக  இருந்தும் - அதன்  விவேகம் குறைந்திருப்பதுடனும் அவர் இப்படி விரும்பி விட்டார்! அல்லாஹ் இதை இவ்வாறு கூறுகிறான்:1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 next