பார்த்தல்இறைவனால் அளிக்கப்பட்ட நிஃமத்துகளில் ஒன்று பார்வையாகும். மனிதன் அதனை தனது பரிபூரணத்திற்காக வேண்டியும் தனது முன்னெற்றத்திற்காக வேண்டியும் பயன்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இயற்கையின் அழகைப் பார்த்து ரசிப்பது ஆகுமானதாகும். ஆனால், பார்வையை மற்றவர்களை விட்டு தாழ்த்திக் கொள்வதும், மஹ்ரமல்லாதவர்களை பார்ப்பதை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். இதற்கென சில சட்டங்கள் இருக்கின்றன. அவைகளில் சில,

மஹ்ரமானவர்களும் மஹ்ரமல்லாதவர்களும்

திருமணம் முடிப்பதற்கு எவர்களெல்லாம் ஹராமாகுமோ, மேலும் பார்க்கும் விடயத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு எவருக்கெல்லாம் இல்லையோ அவர்கள் மஹ்ரமானவர்களாவர்.

ஆண்கள் மீதும், ஆண் பிள்ளைகள் மீதும் மஹ்ரமானவர்கள்.

1. தாய், தாயின் தாய்

2. மகள், பிள்ளையின் மகள்.

3. சகோதரி

4. சகோதரியின் மகள்

5. சகோதரனின் மகள்.

6. மாமி (தனதும், தனது பெற்றோரினதும் மாமி)

7. சாச்சி (தனதும் தனது பெற்றோரினதும் சாச்சி)1 2 3 4 5 6 next