நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்.சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு கெட்ட காரியத்திற்கும், செய்யாது விடப்படுகின்ற ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் ஒவ்வொரு மனிதனும் பொறுப்பாகின்றான். எனவே, ஒரு நல்ல காரியம் செய்யாது விடப்படுகின்ற போது, அல்லது ஒரு ஹராமான விடயம் நிகழும் போது அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து விடுவது நல்ல காரியமல்ல. ஒரு வாஜிபான காரியம் நிகழ்வதற்கும், கெட்ட செயல் நிகழாதிருப்பதற்கும் முயற்சிப்பது சமூகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்டாயக் கடமையாகும். இந்த செயல் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனப்படும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் முக்கியத்துவம்.

இமாம்களின் கூற்றுக்களின் பிரகாரம்.

1. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்பது மிகவும் முக்கியமான, பிரத்தியேகமான கடமைகளில் ஒன்றாகும்.

2. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் காரணத்தால் தீனின் வாஜிபுகள் உறுதியாகின்றன.

3. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்பது தீனின் கட்டாயக் கடமைகளில் ஒன்றாகும். எவர் அதை மறுக்கின்றாரோ அவர் காபிராகி விடுகின்றார்.

4. மக்கள் நன்மையை தவிர்ந்து தீமையைப் புரிகின்ற போது பரக்கத்தென்பது அவர்களை விட்டும் எடுக்கப்படுவது மாத்திரமன்றி துஆக்களும் பயனளிக்காது போய் விடுகின்றன.

நன்மை, தீமை என்பவற்றின் வரைவிலக்கணம்.

மார்க்கத்திலே எல்லா வாஜிபுகளுக்கும் அனைத்து சுன்னத்துகளுக்கும் மஃறூப் (நன்மை) என்றும், சகல ஹராம்களுக்கும் மக்ரூஹ்களுக்கும் முன்கர் (தீமை) என்றும் சொல்லப்படும். எனவே, மக்கள் வாஜிபுகளையோ, அல்லது சுன்னத்துகளையோ செய்யத் தூண்டுவது நன்மையை ஏவுதலும், ஹராமான செயலையோ, அல்லது மக்ரூஹான செயலையோ செய்யாது தடுப்பது தீமையை விட்டும் தடுத்தலும் ஆகும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் வாஜிபுல் கிபாயா ஆகும். அதாவது போதுமான அளவு அது நிகழும் போது மற்றவர்களை விட்டும் அதன் பொறுப்பு விழுந்து விடுகின்றது. கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற இடத்தில் எவரும் அதைச் செய்யாது விட்டு விடும் போது அவர்கள் எல்லோரும் வாஜிபான ஒரு செயலை விட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் நிபந்தனைகள்.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது சில நிபந்தனைகளை வைத்து கட்டாயக் கடமையாகின்றது. அவை இல்லாதிருக்கும் போது அதன் பொறுப்பு நம்மை விட்டும் விழுந்து விடுகின்றது. அவையாவன,

1. நன்மையை ஏவி தீமையை விட்டும் தடுக்கும் மனிதர், மக்கள் ஒரு நன்மையான விடயத்தை விட்டு விட்டு தீய செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்திருத்தல் வேண்டும். மாறாக, தெரியாதிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களை அதை விட்டும் தடுப்பது வாஜிபாக மாட்டாது.1 2 3 4 next