ஹஜ்.இறைவனது இல்லத்தை அவனது கட்டளைக்கு அடிபணிவதற்காக வேண்டி கீழ்வரும் நிபந்தனைகளைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு தனது வாழ்நாளின் ஒரு தடவை வாஜிபாகும்.

ஹஜ் செய்பவரின் நிபந்தனைகள்.

1. பருவ வயதை அடைந்திருத்தல்

2. புத்திசாலியாகவும் சுதந்திரமானவராகவும் இருத்தல்.

3. சக்தியுடையவராக இருத்தல்.

       அ)      பிரயாணப் பொதிகளையும் போக்குவரத்து டிக்கட்டையும் பெறுவதற்கு

       ஆ)     மக்கா சென்று ஹஜ் செய்வதற்கு உடம்பு ஆரோக்கியமானவராக

       இ)      வழியில் தடையில்லாதிருத்தல். வழி அடைக்கப்பட்டிருந்தாலோ, அல்லது செல்லும் போது உயிருக்கு ஏதும் நடந்து விடுமென பயந்தாலோ அவருக்கு ஹஜ் கடமையல்ல. ஆனால், வேறொரு வழியினால் செல்ல முடியுமானால் அதனால் கடும் சிரமத்தை எதிர்நோக்கமாட்டாரென்றிருந்தால் அவ்வழியால் செல்ல வேண்டும்.

       ஈ) ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு நேரம் இருக்க வேண்டும்.

       உ)      அவர் எவர்களுக்கெல்லாம் செலவு கொடுப்பாரோ, உதாரணமாக, மனைவி, பிள்ளைகளுக்கும் ஏனையவர்களுக்கும் செலவு கொடுப்பதற்கு வசதியுள்ளவராக இருத்தல்.

       ஊ)     ஹஜ் முடிந்து வந்தபின் தொழிலோ, விவசாயமோ அல்லது வேறு சொந்த முதல்களோ வாழ்க்கையைத் தொடர்வதற்காக வைத்திருக்க வேண்டும்.1 next