ஸக்காத்.முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கு இருக்கும் மற்றொரு முக்கிய கடமைகளில் ஒன்று ஸக்காத் கொடுப்பதாகும். இது குர்ஆனில் தொழுகையின் பின் ஈமானுடைய அடையாளமாக, உண்மையான செயலாக கருதப்பட்டிருப்பது இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு சான்றாகும்.

பரிசுத்தவான்களினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அதிகமான ஹதீஸ்களில் எவரொருவர் ஸக்காத் கொடுப்பதை விட்டும் தடுக்கின்றாரோ அவர் தீனிலிருந்து வெளியாகி விட்டார் என வந்துள்ளது.

குமுஸைப் போல் ஸக்காத்திற்கும் சில குறிப்பிட்ட இடங்கள் உள்ளன. அதிலொரு பங்கு உடல், வாழ்க்கைக்கான வரியாகும். அது வருடத்தில் ஒருமுறை நோன்புப் பெருநாளன்று கொடுக்கப்படும். அது பணம் கொடுக்க வசதி, சக்தியுள்ளவர்கள் மீது வாஜிபாகும். ஸக்காத்தின் இவ்வகை, நோன்பின் கடைசிப் பகுதியில் கூறப்பட்டு விட்டது.

அடுத்த பகுதி பொருட்களுடைய ஸக்காத்தாகும். ஆனால், மனிதர்களின் அனைத்துப் பொருட்களும் இந்த சட்டத்திற்குள் அடங்க மாட்டாது. மாறாக, ஒன்பது பொருட்களிலே ஸக்காத் இருக்கின்றது. அவைகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கவும் முடியும்.

ஸக்காத் வாஜிபான பொருட்கள்.

       1)  தானியங்கள்

            1.   கோதுமை

            2.   நெல்லு

            3.   ஈத்தம் பழம்

            4.   கிஸ்மிஸ் (பிளம்ஸ்)1 2 3 4 5 6 7 8 9 next