குமுஸ்குமுஸ் (ஐந்தில் ஒன்று) கொடுப்பது முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கு இருக்கும் கடமைகளில் ஒன்றாகும். அதாவது சில இடங்களில் தனது பொருளிலிருந்து ஐந்திலொரு பங்கை குறிப்பான சில செலவுகளுக்காக இஸ்லாமிய அரசரிடம் கொடுக்க வேண்டும். ஏழு பொருட்களில் குமுஸ் கொடுப்பது வாஜிபாகும். 1. வருடாந்த செலவிலிருந்து மேல் மிச்சமாகியவை (உழைப்பில் எஞ்சியவை) 2. உலோகப் பொருட்கள், அல்லது புதை பொருட்கள். 3. புதையல். 4. யுத்தத்தில் கிடைத்த பொருட்கள். 5. கடலின் கீழ் சென்று பெறும் முத்துகள். 6. ஹராமான பொருளுடன் கலந்து விட்ட ஹலாலான பொருட்கள். 7. முஸ்லிம்களிடமிருந்து திம்மி வாங்கும் பூமி. 0- குமுஸ் கொடுப்பதும் தொழுகை, நோன்பு போன்ற வாஜிபுகளில் ஒன்றாகும். புத்தியான, பருவ வயதையடைந்த அனைத்து மனிதர்களும் மேற்கூறிய ஏழு விடயங்களில் ஒன்றைக் கொண்டிருந்தால் கட்டாயமாக அதைச் செய்ய வேண்டும்.
|