தயம்மம்தயம்மம் செய்யும் விதம்

1. தயம்மம் செய்வது ஆகுமான பொருளின் மீது இரண்டு உள்ளங் கைகளையும் அடித்தல்

2. இரண்டு கைகளையும் நெற்றியிலும் அதன் இரண்டு ஓரங்களிலும் தடவுதல். அதாவது தலைமுடி முளைத்திருக்கும் இடத்திலிருந்து கண்புருவம், மூக்கின் மேற்பகுதி வரை.

3. இடது கையின் உள்ளங்கையை வலது கைக்கு மேல் தடவுதல்.

4. வலது கையின் உள்ளங்கையை இடது கைக்கு மேல் தடவுதல்.

5. அனைத்து செயல்களும் தயம்மத்துடைய நிய்யத்துடன் இறைவனது கட்டளைக்கு வழிபடுவதற்காக செய்யப்படுதல் வேண்டும். அதேபோல் தயம்ம் குளிப்புக்காகவா? அல்லது வுழூவுக்காகவா என குறிப்பிடுதல் வேண்டும்.

தயம்மம் செய்வதற்கு ஆகுமான பொருட்கள்.

1. மண்  2. கிறவல்  3. கருங்கல், மாபிள் கல்   4. சுண்ணாக்கல் (சுடப்படுவதற்கு முன்)  5.செங்கல் 6. சுடப்பட்ட களிமண். உதாரணம் செங்கல், கூசா

சில விடயங்கள்

1. வுழூவுக்காக வேண்டி செய்யப்படும் தயம்மத்திற்கும் குளிப்பு பகரமாக செய்யப்படுவதற்கும் இடையில் நிய்யத்தைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

2. வுழூவுக்கு பகரமாக தயம்மம் செய்திருக்கும் ஒருவருக்கு வுழூவை முறிக்கும் விடயங்களில் ஒன்று இடம் பெற்றால் தயம்மமும் முறிந்து விடும்.1 2 next