வுழுதொழுபவர் அதை நிறைவதற்கு முன் வுழூச் செய்து தன்னை இப்பாரிய வணக்கத்தைச் செய்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் கட்டாயமாக குளிக்க வேண்டும். அதாவது உடம்பு பூரா கழுவ வேண்டும். வுழூச் செய்யவோ, அல்லது குளிக்கவோ முடியாத போது தயம்மம் செய்து கொள்ள வேண்டும். அதனுடைய சட்டதிட்டங்களையும் அது செய்யும் முறைகளையும் இப்பாடத்தில் பின்பு வரும் பாடங்களிலும் அறிய முடியும்.

வுழூச் செய்யும் விதம்.

வுழூச் செய்யும் போது ஆரம்பத்தில் முகத்தைக் கழுவ வேண்டும். பின் வலது கையையும் அதன் பிறகு இடது கைகளில் இருக்கும் நீரின் மூலமாக தலையை மஸ்ஹு செய்துவிட்டு, பின் வலது காலையும் தடவி இறுதியாக இடது காலையும் தடவி மஸ்ஹுசெய்ய  வேண்டும்.

இதைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.

வுழூ

       1) கழுவுதல்

            முகம் : நீளத்தால் தலைமுடி முளைக்குமிடத்திலிருந்து நாடிக்குழி வரை அகலத்தால் பெருவிரலுக்கும் நடு விரலுக்கும் இடைப்பட்ட பகுதி.

            வலது இடது கை : முழங்கை முதல் விரல்களின் நுனிவரை

       2) தடவுதல்

            தலை : நெற்றிக்கு மேலிருக்கும் தலையின் பகுதி1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 next