சுத்தம்.சிறு குறிப்பு

இஸ்லாமிய அமல்களை எந்த அடிப்படையில் செய்ய வேண்டும் என்பவைகளைக் கொண்ட கோர்வை அஹ்காம் என்று அழைக்கப்படும். அவைகளில் தொழுகையும் ஒன்று. இது வாஜிபான விடயங்களில் ஒன்றாகும்.

தொழுகையுடன் சம்பந்தப்பட்டவைகள் மூன்று வகைப்படும்.

1. முகத்தமாத் : தொழுபவர், அதைச் செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விடயங்கள்.

2.முகாரினாத்: ஆரம்பத் தக்பீரிலிருந்து சலாம் வரையிலான தொழுகையுடன் மேலோட்டமாக சம்பந்தப்பட்ட விடயங்கள்.

3. முப்திலாத் : தொழுகையை பாதிலாக்கும் விடயங்களுடன் சம்பந்தமான விடயங்கள்.

முகத்தமாத்.

வணக்கத்தில் மிகவும் உயர்ந்ததான தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டியது சுத்தமாகும். தொழும் ஒருவர் தனது உடலையும் உடையையும் நஜீஸ்களை விட்டும் பாதுகாத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நஜீஸ்களை விட்டும் தூய்மையாக இருப்பதற்கு நஜீஸ்களின் வகைகளையும் அவைகளை தூய்மையாக்கும் விதங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும். இதனால் முதலில் அவைகளைக் கூறுகின்றோம்.

உலகில் இருப்பவைகளில் பதினொன்றைத் தவிர ஏனைய அனைத்தும் தூய்மையானவையாகும்.

நஜிஸ்கள்

1. மலம்           

2. சலம் (மனிதன், மற்றும் உண்பது ஹராமான குதித்துப் பாயும் இரத்தமுடைய விலங்குகள். உதாரணம் பூனை, எலி)                  1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 next