முக்கிய விடயங்கள்முந்திய அத்தியாயங்களில் மார்க்கத்தின் அடிப்படையான ஈமானின் அம்சங்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் முன்வைக்கப் பட்டது. இவ் அத்தியாயத்தில், மார்க்கத்தின் வேறு சில முக்கிய விடயங்கள் பற்றிய நமது நம்பிக்கைகளை ஆராய்வோம்.

1. அறிவின் பிரித்தறியும் தன்மை

மனிதனுடைய அறிவு, பெரும்பாலான விசயங் களில் நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்தறிந்து கொள்ளும் இயல்பு டையதாகும். வாழ்வில் நல்லவற்றை கைக்கொண்டு, தீயவற்றைக் கைவிடுவதற்காக மனிதர்க ளுக்கு அல்லாஹ் வழங்கிய பெரும் அருட்கொடையே இதுவாகும். இறைவேதங்கள் இறங்குவதற்கு முற்பட்ட காலங்களில், அறிவின் மூலமாக பல விடயங்களில் நன்மை-தீமைகளை உணர்ந்து செயற்படுவோராக மனிதர்கள் இருந்தனர்.

இதன்படி உண்மை, நேர்மை, வீரம், நீதி, பெருந் தன்மை, விட்டுக்கொடுப்பு, தர்மம் போன்ற பல அம்சங்களை நல்லவை யாகவும் பொய், துரோகம், கஞ்சத்தனம், பிடிவாதம், கோழைத் தனம் போன்ற பல அம்சங்களை தீயவையாகவும் அறிவு பகுத்தாய்ந்து புரிந்து கொள்கின்றது.

மனிதனின் அறிவு, வரையறைக்குட்பட்டது என்ப தால் அதனால் அனைத்தையும் பிரித்தறிந்து கொள்வ தென்பது சாத்திய மற்றது. எனவே, அறிவு மூலம் மட்டும் விளங்கிக் கொள்ளப்பட முடியாத விளக்கங்களையும் ஞானங்களையும் அறிவிப்பதற் காகவே வேதங்களையும் இறைத்தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.

எனவே, அறிவானது உண்மையை உரியபடி உணர்வதில் சுதந்திரமாகச் செயற்படுகின்றது என்பது முற்றாக நிராகரிக்கப்படு மானால், ஏகத்துவம், நபிமாரின் வருகை, இறைவேதங்கள் பற்றிய நம்பிக்கைகள் பாழாகி விடலாம். ஏனெனில், அல்லாஹ்வின் உள்ளமையை நிரூபிப்பதும் நபிமாரின் பணியை உண்மைப்படுத்து வதும் அறிவின் மூலமேயாகும். ஏகத்துவம், நபித்துவம் பற்றி நிரூபிக்கின்ற போது, முதலில் அறிவு ரீதியான ஆதாரங்களைக் கொண்டே அவற்றை நிரூபிக்க வேண்டும். மாறாக, மார்க்க ஆதாரங்களைக் கொண்டு மாத்திரம் இவற்றை நம்பச் செய்ய முடியாது.

2. இறைநீதி

அல்லாஹ் நீதியானவன் என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். அவ்வாறே அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதியிழைப்பதும் ஆதாரமில்லாது ஒருவரைத் தண்டிப்பதும் அல்லது மன்னிப்பதும் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது விடுவதும் தகுதியில் லாத மற்றும் பிழை செய்வோரை நபிமார்களா கத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேதங்கள், தூதுத்துவம், அற்புதங்களைக் கொடுப்பதும் எவ்விதத்திலும் சாத்திய மற்றன வாகும். சீதேவிகளாக வாழவேண்டும் என்பதற்கா கப் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு, நபிமார்களை அனுப்பி நேர்வழியை அறிவிக்காது விட்டுவிடுவதும் அல்லாஹ்வினது நீதியைப் பொறுத்தவரை சாத்திய மற்றதாகும்.

அல்லாஹ் நீதியாளனாகவும், தன் அடியார்களுக்கு சிறிதளவும் அநீதி இழைக்காதவனாகவும் இருக்கின்றான். அநீதி என்பது, அல்லாஹ்வின் தெய்வீக இயல்புக்கு முற்றிலும் ஒவ்வாத ஓர் அம்சமாகும்.

'இன்னும் உமதிறைவன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.' (18:49)

எனவே, இவ்வுலகிலோ மறுமையிலோ மனிதர்களுக்கு அல்லாஹ்வினால் தண்டனை வழங்கப் படுகின்றதெனில், அதற்கு முழுக் காரணமாகவும் அம்மனிதனே இருக்கின்றான். அவனது செயல்களே அவனது நிலை யை நிர்ணயம் செய்கின்றன.

'ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்ய வில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்.' (09:70)1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next