நபி (ஸல்) அவர்களின் இறுதித் தூதுத்துவம் 

 

அல்லாஹ், மனித சமூகத்தை நெர்வழிப்படுத்துவதற்கான தனது தொடர் செயற்பாட்டின் ஒர. அங்கமாக நபிமார்களளை அனுப்பி வந்தான். அந்த நபஜமார்களில் இறுதித் தூதுத்துவத்துடன் அனுப்பப்பட்ட முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அறியாமை இருளின் கொடியிலிருந்து மனித சமூகத்தை மீட்டெடுத்ததோடு, அனைத்து சீர்கேடுகளிலிருந்தும் தூரமாக்கப்பட்ட சிறப்பான வாழ்வொழுங்கும் ஆரோக்கிய நெறிமுறைகளும் கொண்ட தூய மார்க்கத்தையும் அச்சமூகத்துக்கு இனங்கான்பித்தார்கள்.

நபிகளாரின் ஜீவித காலப்பகுதியில் அவர்களை ஏற்றுக் கொண்டிருந்த அனைத்து மக்களும் கருத்து வேறுபாடுகளையும் சமூக முரண்பாடுகளையும் களைந்து சரவதேச மயப்படுத்தப்பட்ட உயர்ந்த சகோதரத்துவ ஒற்றுமையை இறுக்கமாகப் பற்றிப் பிடித்த நிலையில் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றனர். நபிகளாரின் ஒவ்வொரு வார்த்தையும் அசைவும் மனித சமூகத்துக்கான அளப்பரிய முன்மாதிரியாகத் திகழ்ந்தன.

நபி (ஸல்) அவர்கள், தம்மோடு இணைந்து தமது சமய நடைமுறைகளுக்கும் தூதுத்துவப் பண்களுக்கும் மிகப்பெரும் உதவியாக இருந்து வந்த தமது தோழர்களுடன் நெருக்கமான அன்பையும் உறவையும் பேணி வந்தார்கள். ஒவ்வொரு ஸஹாபியும் தமக்குரிய பிரத்தியேக சிறப்பும் அந்தஸ்தும் பெற்றுத் திகழ்ந்தனர். அச்சிறப்புகள் அவர்களது இம்மை மறுமை நிலைகளையும் ஆளுமைப் பண்புகளையும் தெளிவுறுத்தும் அம்சங்களாக விளங்கின.

    ஆயினும், நபிகளாருக்குப் பின் முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாமிய உலகினதும் நடவடிக்களைப் பொறுப்பேற்று முன்னெடுக்கக்கூடிய தலைமைத்துவ அந்தஸ்துள்ள நபர் பற்றிய ஊகங்களும் கணிப்புகளும் தெளிவற்றவையாகவே இருந்து வந்தன. ஒவ்வொரு ஸஹாபிக்கும் உரிய பிரத்தியோக அந்தஸ்துகளை உயர்த்திக் காண்பித்ததோடு, தலைமைத்துவ அந்தஸ்து தொடர்பான கணிப்புக்களில் சங்கடங்களையும் ஏற்படுத்தி விட்டிருந்தன.

    ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகப் பெரும் தாக்கம் செலுத்தக்கூடிய தலைமைத்துவம் என்பது, தெளிவற்ற நிலையிலமைந்து அதன் மூலம் தம் 23 வருட சிரமங்களையுடைத்த சமயப் பணியின் பயன்பாடு தூர்ந்து போய்விடுவதை நபிகளார் ஒரு போதும் விரும்பவில்லை. அல்லாஹ்வும் அத்தகைய நிலையில் முஸ்லிம் சமூகத்தை கைவிட்டு விட தன் இறை பண்புகளை விட்டும் நீங்கியவனுமல்ல.

    தமக்குப் பின் மஸ்லிம் சமூகத்தின் கடிவாளத்தைக் கையிலெடுக்கும் தகுதியும் இறை நியதியின் அடிப்படையிலான ஆளுமையும் கொண்டவர் யாரென்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். தமது நபித்துவ வாழ்க்கையின் ஆரம்பம் தொடக்கம் அது பற்றிய சமிக்ஞைகளை சூசகமாகக் குறிப்பிட்டும் வந்தார்கள். எனினும், முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியையே மாற்றியமைக்கக் கூடிய இம்மாபெரும் அம்சத்தை பகிரங்கப்படுத்துவதற்கா சந்தர்ப்ப சாதகங்களை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை, தமது இநுதிக் காலப் பகுதியில் நபிகளார் எதிர்நோக்கினார்கள்.

    அல்லாஹ் அந்த நிர்ப்பந்தங்களையெல்லாம் அலட்சியப்படுத்தும் படியான தன் கட்டளையின் மூலம், முஸ்லிம் சமூகத்தின் அடுத்த தலைவரைக் குறித்துரைக்கும் ஏவலை நபிகளாருக்கு விடுத்தான்.

   தமது தூதுத்துப் பணியை நிறைவு செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் இறுதிக் கட்டளையை அமுல்படுத்தத் தயாரானார்கள்.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 next