அஹ்லுல் பைத்தை ஷீஆ என்றும் கறுதலாம்سورة آل عمران


அத்தியாயம் - 3 ஸூரத்துல் ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்)

ருகூஃ : 20 மதனீ வசனங்கள் : 200

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

الم (1)

அலிஃப், லாம், மீம்.(1)

 اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ (2)

அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன். (2)

 نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالإِنجِيلَ (3)

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (3)1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 next