சமுகம்மஃரிபிய்யா அவர்கள் கூறும் போது, 'இளம் பெண்கள், தம் வாழ்வில் நபி (ஸல்) அவர்களை தமது முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களது அற்புதமான அழகிய நடைமுறைகளுடன் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதே இப்போட்டி நிகழ்ச்சியின் நோக்கமாகும்' என்றார்

சூடானில் இடம்பெற்ற மிஷனரிகளுக்கான குர்ஆனிய கற்கைகள் நிறைவு பெற்றன

சூடானின் குர்ட்வான் மாகாணத்திலுள்ள அல்அப்பாஸியா நகரில், நூற்றுக்கும் அதிகமான சூடானிய மிஷனரிகளுக்காக நடத்தப்பட்ட குர்ஆனிய அறிவியல் மற்றும் ஹதீஸ் துறைகளிலான கல்வியியல் கற்கைநெறி டிசம்பர் எட்டாம் திகதி முடிவுற்றது.

அல்ரியாத் செய்திப் பத்திரிகையின் கருத்தின்படி, இக்கற்கைநெறி, சூடானிலுள்ள முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் மற்றும் ஹதீஸ் அறிவியல், பிக்ஹ் சட்டங்கள், இஸ்லாமிய நம்பிக்கைகள் எனும் தலைப்புகளில் இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, சூடானின் கல்விமான்கள் அறிஞர்பெருமக்கள், சமய, கலாசார, அறிவுத்துறைகளிலான விரிவுரைகளை முன்வைத்தனர்.

சூடானின் மிஷனரிகள் மற்றும் மஸ்ஜித் இமாம்கள் ஆகியோருக்கான சமய அறிவியல், உரையாற்றல் திறன், கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றுக்கான மற்றொரு கல்வியியல் கற்கைநெறி, அல்ஹிக்மா அறநிலையத்தின் அனுசரணையுடன், மேற்படி அலுவலகத்தினால் ஏற்கனவே நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கற்கைநெறியில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மஸ்ஜித் இமாம்களும் மற்றும் 74 மிஷனரிகளும் கலந்து கொண்டிருந்தன.

 'சுன்னிகளின் பார்வையில் கதீர்' நூலின் அல்பானிய மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது

முஹம்மத் ரிஸா ரன்ஜ்பரான் அவர்களினால் எழுதப்பட்டு, அஸ்லூம் அலி அவர்களால் அல்பானிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு, மைலின்டா இஸ்மாயிலி அவர்களால் சரிபார்க்கப்பட்ட 'சுன்னிகளின் பார்வையில் கதீர்' நூலின் அல்பானிய மொழிபெயர்ப்பு 163 பக்கங்களில் உலக அஹ்லுல்பைத் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கதீர் நினைவு மாநாட்டின் போது, உலக அஹ்லுல்பைத் சம்மேளனத்தினால் கொசோவார் நகரில் வைத்து இம்மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. நகரின் நப்ரோன் ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் அலவி, ஷீயா மற்றும் சுன்னா சமூகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next