சமுகம்ஹிஸ்புல்லாஹ் ஜிஹாத் முன்னணியின் செயலாளர் நாயகம் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ், இவ்வொன்றுகூடலின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் இடம்பெற்ற இஸ்லாமிய எழுச்சிகள் மற்றும் ஜிஹாத் என்பன தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டின் முகப்பு ஜிஹாத் என்பதாகும்.

ஆரம்ப நிகழ்வில், லெபனான மக்களின் ஜிஹாதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ், பலஸ்தீன ஹமாஸின் அரசியல் பிரிவுத் தவிசாளர் காலித் மாஷல், மற்றும் ஈராக்கிய அறிஞர் ஹாரித் அல்தாரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

பிரித்தானிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கல்லோவே போன்ற பலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரிக்கும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

'குத்ஸும் காஸாவும்: முற்றுகையும் யூதத்துவமும்' மற்றும் 'இஸ்லாமிய எழுச்சிக்கு ஆதரவு வழங்குவதில் தேசிய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்களிப்புகள்' என்பன இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாகும். நிகழ்ச்சியின் இறுதி நாளில், இவ் ஒன்றுகூடலின் இறுதித் தீர்மானத்தைப் பிரகடனப்படுத்துவதற்காக, பங்குபற்றிய அனைவரும், பலஸ்தீன எல்லைக்கருகிலுள்ள லெபனானின் தென் பிராந்தியத்துக்கு பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கட்டார், பெண்களுக்கான ஹதீஸ் போட்டியை நடத்தவுள்ளது

கட்டாரின் தலைநகர் டோஹாவில் அமைந்துள்ள ஷெய்க் ஈத் அறநிலையம், இளம் பெண்களுக்கான ஹதீஸ் போட்டியொன்றை ஒழுங்கு செய்துள்ளது.

'இப்போட்டியில் பங்குபற்றுபவர்கள், போட்டி நிபந்தனையாக, முஹைதீன் அபு ஸகரிய்யா பின் ஷரபி அவர்களால் தொகுக்கப்பட்ட 'நாற்பது ஹதீஸ்கள்' எனும் நூலிலுள்ள நபிகளாரின் பொன்மொழிகளை மனனமிட்டிருக்க வேண்டும். மேற்படி அறநிலையத்தின் பெண்கள் விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆமினா மஃரிபிய்யாஹ் இத்தகவலை வெளியிட்டதாக கட்டாரின் தினசரிப்பத்திரிகையான அல்ரயா குறிப்பிடுகின்றது.

டிசம்பர் 14ம் திகதி தொடங்கவுள்ள மூன்று நாள் கொண்ட இப்போட்டி நிகழ்ச்சி, 7-9, 10-12, 13-15 மற்றும் 16-18 எனும் நான்கு விதமான வயதுக் குழுக்களிடையே இடம்பெறும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next