சமுகம்15 நாள் கொண்ட இக்கண்காட்சி, பாரிசிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

 

காஷாவின் தென்கிழக்கு நகரில் 'குர்ஆனும் மஹ்தவிய்யத்தும்' மாநாடு

ஈரானின் சிஸ்டான் மற்றும் பலூச்செஸ்டான் மாகாணத்திலுள்ள காஷா நகரின் அஸ்ஸஹ்ரா மஸ்ஜித் கலாசார நிலையத்தில், எதிர்வரும் மார்ச் மாதம், 'குர்ஆனும் மஹ்தவிய்யத்தும்' எனும் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

மாகாணத்தின் மஹ்தவிய்யத் விசேட நிலையத்தின் தலைவர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹஸன் ரிஸா சப்சின், இக்னாவுக்குத் தெரிவிக்கும் போது, 'அஸ்ஸஹ்ரா மஸ்ஜித் கலாசார நிலையத்தின் நிகழ்ச்சிகளும் நடவடிக்கைகளும், மஹ்தவிய்யத் தொடர்பான இளைஞர்களினதும் சமூகத்தினதும் தேவைகளைக் கருத்திற் கொண்டு, திட்டமிட்டு அமுல்படுத்தப்படுகின்றன' என்றார்.

'மஹ்தவிய்யத் நிலையத்தின் பிரதான நிகழ்ச்சி நிரல், மஹ்தவிய்யத் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில், கலை சலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளையும் விசேட வைபவங்களையும் நடத்துவதும், புத்தகக் கண்காட்சிகளை நடத்தி நூலகங்களை செழிப்புள்ளதாக்குவதுமாகும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

சப்சின் மேலும் குறிப்பிடும் போது, 'மஹ்தவிய்யத்தின் பண்புகள், பொய் நபிமார்கள் என்பன தொடர்பான பட்டறைகளையும், குர்ஆனும் மஹ்தவிய்யத்தும் பற்றிய மாநாடுகளையும் ஒழுங்கு செய்வது மற்றும் கல்வியியல் கற்கைநெறிகளை நடத்துவது என்பன, எமது நிலையத்தின் பெப்ரவரி, மார்ச் மாத நிகழ்ச்சி நிரல்களுள் சிலவாகும் என்றார்.

 

பெய்ரூத்தில், இஸ்லாமிய எழுச்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான சர்வதேச மாநாடு

இஸ்லாமிய எழுச்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான சர்வதேச மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பெய்ரூத்தில் ஆரம்பமானது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next