சமுகம்இமாம் ஹுஸைன் (அலை) பற்றிய சர்வதேச மாநாடு

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தொடர்பாக ஆராயும் சர்வதேச மாநாடொன்றை எதிர்வரும் வருடத்தில் நடத்துவதற்கு, ஈரானின் நிதிவள மற்றும் அறக்கொடை விவகார அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஹஸ்ரத் மஃசூமா (அலை) அவர்களது புனித சியாராவைப் பராமரிக்கும் அலுவலகத் தகவலின்படி, யாத்திரிகர்கள் சமய மற்றும் கலாசார உண்மைகள் தொடர்பான தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கும், முஹர்ரம் சபர் ஆகிய மாதங்களில் நிதிவளங்களை சரியாகப் பயன்படுத்துவதற்கும் வழியேற்படுத்தும் வகையில், ஈரானிய அமைப்பு, கடந்த மூன்று வருடங்களாக ஆஷூரா தொடர்பான அறிவியல் மாநாடுகளைக் கூட்டி வருகின்றது.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது எழுச்சியின் குறிக்கோள்கள் பற்றிய சரியானதும் முழுமையானதுமான விளக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, ஆன்மீகத் தலைவரின் ஆலோசனையின் பிரகாரம், இதனை சர்வதேச மட்டத்தில் நடத்துவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம் என நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களின் ஒத்துழைப்புடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிக ஆர்வமாக, மாநாட்டில் முன்வைக்கப்படும் ஆய்வுகளுக்கான கருப்பொருள் பற்றி கலந்தாலோசித்து வருகின்றனர்.

இதுவரை 'இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும் எதிர்ப்பும்', 'ஆஷூரா: புரட்சியும் பரப்பும்', மற்றும் 'ஆஷூரா: வாய்ப்புகளும் சிரமங்களும்' போன்ற தலைப்புகளிலான அதிகளவான ஒன்றுகூடல்கள் பல ஆய்வு நிலையங்களினால் நடத்தப்பட்டு அவை வெளியீடுகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரான்சில் காஸா கண்காட்சி

காஸா தொடர்பான கண்காட்சியொன்றை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி பிரான்சிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் நடத்துவதற்கு அந்நிலையம் திட்டமிட்டுள்ளது.

பிரான்சிய ஓவியர் பிரிஜ்கேட் பெடர் என்பவரால் காஸா தொடர்பாக வரையப்பட்ட கலைப்படைப்புக்கள், இக்கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next