சமுகம்இஸ்லாம்டுடேயின் செய்தியின்படி, எல்லோரும் ஒன்றுகூடும் வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து தொழுகையாளிகளிடம் பொருளாதார உதவிகளைச் சேகரிப்பதற்கும், அவற்றை ஹெய்ட்டியில் காயப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கான மனிதாபிமான அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கும் பள்ளிவாயல் இமாம்களுக்கு நல்லதொரு வாய்ப்பு உள்ளது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளிலுள்ள ஏனைய பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளும், சர்வதேச நிறுவனங்களும், ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு தமது சமூக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஹெய்ட்டியில் 7.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் கடந்த ஜனவரி 12ம் திகதி இடம்பெற்றதன் விளைவாக, ஆயிரக்கக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், அந்நாடு பெரும் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளது.

 

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குர்ஆன் பிரதிகள் ரஷ்யாவில் விநியோகிக்கப்படவுள்ளன

ரஷ்யாவின் முப்திகள் கவுன்சில், ஆசிய பிராந்திய முஸ்லிம் கமிட்டியின் ஒத்துழைப்புடன், அந்நாட்டின் உரல் மற்றும் சிபரியா பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆசிய ரஷ்ய முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் நபிகுல்லாஹ் அசிரோ குறிப்பிடுகையில், ரஷ்யாவின் ஆசிய பகுதி மக்களிடையே சமயப் போதனைகளிலான பிரசாரப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில், எமது நிருவாகம், நாட்டின் உரல் சிபரியா மற்றும் பார்ஈஸ்ட் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நிலையங்களுக்கும் பள்ளிவாயல்களுக்கும் இலவசமாக குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கத் தீர்மானித்துள்ளது என்றார்.

குவைத்திலுள்ள சர்வதேச இஸ்லாமிய அறக்கொடை அமைப்பு, இந்தப் பணிக்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.

குர்ஆன் பிரதிகளின் விநியோகம் இன்னும் சில மாதங்களுக்குள் ஆரம்பமாகி விடும் எனவும் அவர் தெரிவித்தார். 523800

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next