சமுகம்இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜோர்டான் மக்களுக்கு அழைப்பு விடுத்த அல்துஸ்தூர் செய்திப் பத்திரிகையின் பணிப்பாளர் முஹம்மத் ஹஸன் அல்தால், இந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கெனத் திறந்து விடப்படும் என்றார்.

சிரியாவின் குர்ஆனிய நிபுணரும் கல்வியியலாளருமான முஹம்மத் ராதிப் அல்நப்லூசி, இஸ்லாமிய உலகின் வௌ;வேறு அம்சங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் பெரும்பாலான சர்வதேச ச்நதிப்புகளில் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சூடானில் குர்ஆனியப் போட்டி நிகழ்ச்சி

சூடானிலுள்ள ஈரான் கலாசாரப் பிரிவு எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி கர்டோமில் குர்ஆனிய போட்டி நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இப்போட்டி நிகழ்ச்சி, கர்டோம் உள்ளக குர்ஆன் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈரானிய நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் முதல் நாற்பது போட்டியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்குவதற்கு ஈரான் கலாசார நிலையம் திட்டமிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

 

ஹெய்ட்டியிலுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு

பிரான்சிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளின் ஒன்றியம் கடந்த 14 ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில், உலக முஸ்லிம்கள் அனைவரும் ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next