சமுகம்இமாம் மூஸா சத்ர் அவர்களின் குர்ஆன் ஆய்வுரை வெளியிடப்படவுள்ளது

அல்குர்ஆன் விரிவுரைகள் அடங்கிய இமாம் மூஸா சத்ர் அவர்களின் ஆக்கத் தொடர்கள் ஐந்து பாகங்களாக விரைவில் வெளியிடப்படவுள்ளன.

குர்ஆனிய ஆய்வுரை எனத் தலைப்பிடப்பட்ட இத்தொடர்கள் மஹ்தி பாறூக்கியான் மற்றும் அலி ரிஸா மஹ்மூதி ஆகியோரால் முதற்தடவையாக பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இதில், அல்குர்ஆன் அத்தியாயங்களான இஹ்லாஸ், நாஸ், பலக், கத்ர் மற்றும் தகாசுர் ஆகிய சூராக்களின் ஆய்வுரைகளும், அத்துடன் குர்ஆன் மற்றும் தப்ஸீர் என்பவற்றின் புதிய பிரதிபலிப்பு எனும் தலைப்பிடப்பட்ட ஓர் ஆய்வும் இடம்பெற்றுள்ளன.

இத்தொடர் 3000 பிரதிகளாக, இமாம் மூஸா சத்ர் கலாசார மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ளது.

1928ல் ஈரானில் பிறந்த இமாம் மூஸா சத்ர் அவர்கள், பிற்காலத்தில் பிரபல்யம் வாய்ந்த ஷீயா மார்க்க அறிஞராகவும் சிந்தனையாளராகவும் மாறினார். 1960ல் லெபனானுக்குச் சென்று அங்கு முக்கியத்துவம் வாய்ந்த சமய, சமூக, அரசியல் புள்ளியாக உருவெடுத்தார்.

அவர் லிபியாவுக்கு 1978ல் விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது, அவரது இரண்டு தோழர்களுடன் சேர்த்து நயவஞ்சகர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குர்ஆன் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அப்துல் பாசித்தின் ஓதல் பற்றி ஆராய்கிறது

மறைந்த பிரபல காரி அப்துல் பாசித் அவர்களின் குர்ஆன் ஓதல்களைப் பகுப்பாய்வு செய்யும் நிகழ்ச்சியொன்று, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஈரானின் குர்ஆன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.

சர்வதேச குர்ஆன் நிபுணர்களின் ஓதல்களை ஆராயும் பொதுமன்றங்களுக்கான தொடரின் புதிய நிகழ்வாக இது இடம்பெறுகின்றது.

இதற்கு முந்தைய தொடர்களில், குர்ஆனிய நிபுணர்களான முஹம்மத் ரிபாஅத், முஸ்தபா இஸ்மாயீல், அலி மஹம்மூத், முஹம்மத் சித்தீக் மின்ஷாவி, அப்துல் அஸீஸ் ஹிஸான், கலீல் அல்ஹிஸ்ரி, அப்துல் பத்தாஹ் ஷாஷாயி, அலி அல்பினா மற்றும் காமில் யூசுப் அல்பஹ்திமி ஆகியோரின் ஓதல்கள் பற்றி ஆராயப்பட்டன.

ஈரானின் குர்ஆன் நிபுணர் அப்பாஸ் சாலிமி அத்துடன் செய்யித் ஹுஸைன் மூஸாவி பலாதெஹ் மற்றும் முஹம்மத் ரிஸா புர்சர்காரி ஆகியோர் இவ்வெள்ளிக்கிழமை மன்றத்தில் கலந்து கொள்வார்கள்.

மேலும், முஹம்மத் காஸிம் முஹம்மத் சாதேஹ் மற்றும் தாரிக் அப்துல் பாசித் ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் இணைந்து கொள்வர்.

தென் எகிப்தின் சிறிய கிராமமொன்றில் 1927ல் பிறந்த அப்துல் பாசித் அப்துஸ்ஸமத், உலகின் பல பாகங்களிலும் அறியப்பட்ட மிகச் சிறந்த அல்குர்ஆன் காரியாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39