சமுகம்குர்ஆனினதும் சுன்னாவினதும் மருத்துவ அற்புதங்கள் பற்றி ஆராயும் மாநாடு

குர்ஆன் மற்றும் சுன்னாவின் மருத்துவ அற்புதங்கள் பற்றி ஆராய்வதற்கான சர்வதேச மாநாடொன்று டிசம்பர் 31ம் திகதி, எகிப்தின் துறைமுக நகரான அலெக்சாந்திரியாவில் இடம்பெற்றது.

அலெக்சாந்திரியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இம்மாநாடு, புனித அல்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களது சுன்னாவிலும் உள்ள மருத்துவ அற்புதங்கள் பற்றிய தகவல்களை வழங்கியது.

எகிப்திலிருந்தும் ஏனைய பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்தொகையான மருத்துவ அறிவியலாளர்களும் குர்ஆன் ஆய்வாளர்களும் குர்ஆன் சுன்னாவின் மருத்துவ அற்புதங்கள் தொடர்பான தமது ஆய்வுகளை மாநாட்டில் முன்வைத்தனர்.

குர்ஆனிய அற்புதங்களின் சர்வதேச சங்கத்தின் ஆலோசகர் அப்துல் ஜவாத் அஸ்ஸவி, அரபு சூழல் ஒழுங்கமைப்பின் பிரதிப் பொறுப்பாளர் மஜீத் அஷ்ஷர்காவி உள்ளிட்ட பல அறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் ஓர் அங்கமாக, வினாவிடை அமர்வொன்று விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகங்கள் தொடர்பான ISESCO வின் சர்வதேச கருத்தரங்கு புதுடில்லியில்

குவைத்தின் வக்பு மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு, மற்றும் இந்தியாவின் இஸ்லாமிய பிக்ஹு கல்வியகம் என்பவற்றின் ஒத்துழைப்புடன், இஸ்லாமிய கல்வி, அறிவியல் மற்றும் கலாசார ஒழுங்கமைப்பு (ISESCO) நிறுவனம், சர்வதேச செயலாண்மை மற்றும் சட்டங்கள் என்பவற்றினூடாக, முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள் பற்றி ஆராயும் சர்வதேச கருத்தரங்கொன்றை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு புதுடில்லியிலுள்ள ஹம்பார்ட் பல்கலைக்கழகத்தில் 2010 ஜனவரி 2 தொடக்கம் 3 வரை நடத்தப்படவுள்ளது.

சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் பற்றி ஒழுக்க சட்ட ரீதியாக விழிப்புணர்வூட்டுவதும், சிறுபான்மையினரின் கலாசார நாகரிக மற்றும் நடைமுறை நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதும், குடியுரிமை, குடியகல்வு மற்றும் சுதேசியம் உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத நாடுகளில் முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய விடயங்கள் பற்றிப் பரீட்சிப்பதும், சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச மற்றும் இஸ்லாமிய சட்டத்துறைகளைப் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராய்வதும் தெளிவுபடுத்துவதும் இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next