சமுகம்இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முஸ்லிம் அறிஞர்கள், இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறைமை தொடர்பான கருப்பொருள்களை விளக்கும் விரிவுரைகளை இக்கருத்தரங்கில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரித்தானிய இஸ்லாமிய வங்கிக்கான ஷரீஆ மேற்பார்வையாளரும், லண்டன் இஸ்லாமிய ஷரீஆ கவுன்சில் நீதிபதியும் மகாராஷ்டிராவிலுள்ள மௌலானா ஆசாத் சிறுபான்மை நிதி வளத் திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான முப்தி அப்துல் காதிர் பரகதுல்லாஹ், மற்றும் அறிஞர் கப்பார் ஷைய்க் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உரைகளை நிகழ்த்துவார்கள் எனவும் எம்.பி. கஸ்மி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய குடியேற்றங்கள் குத்ஸை யூதமயமாக்க முனைவதாக ஓஐசி செயலாளர் நாயகம் கண்டனம்

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பின் (ஓஐசி) செயலாளர் நாயகம் பேராசிரியர் இக்மாலுத்தீன் இஹ்சனக்லு அவர்கள், இஸ்ரேல் ஆறாயிரம் குடியிருப்பு வதிவிடங்களை அமைக்கும் தனது நீண்ட கால செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது கிழக்கு ஜெரூசலத்தில் அமைத்து வரும் 700 குடியிருப்பு வதிவிடங்களுக்கான கட்டுமானப் பணிகளை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேலின் இத்தீர்மானம், கிழக்கு ஜெரூசலம் முழுவதையும் யூதமயப்படுத்தும் உள்நோக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும் எனவும், இது அங்கு வாழும் பலஸ்தீன மக்களது வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் மிகக் கொடூரமான செயல் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.

பலஸ்தீன மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் இஸ்ரேல் அமைத்து வரும் இச்சட்டவிரோதக் குடியேற்றத் திட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சட்டங்கள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் தற்போது மேற்கொண்டு வரும் வன்முறைகளும் இஸ்லாமிய புனிதஸ்தலங்களில் செய்துவரும் அழிவு நடவடிக்கைகளும், அங்கு முஸ்லிம்களின் இருப்புக்கான சான்றுகளை இல்லாதொழிக்கும் சதிமுயற்சியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சட்டவிரோதக் குடியேற்றங்களை நிறுத்தி பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச சமூகங்கள் முன்வர வேண்டும் எனவும் செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next