சமுகம்மார்க்க நிபுணர்கள் மற்றும் பரிசோதனை விஞ்ஞான அறிஞர்கள் ஆகியோரிடையில் பயனுள்ள ஓர் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில், 'மனிதனும் உலகமும்: சமய விஞ்ஞான எதிர்மறைப் பார்வை' எனும் தலைப்பிலான கருத்தரங்கு டிசம்பர் நான்காம் திகதி பிரான்சிலுள்ள ஜெனிஸ் லவல் எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது.

உம்மா எனும் இணையத்தளத்தின் கருத்தின் பிரகாரம், இக்கருத்தரங்கு லியோனிலுள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது ரோன் அல்ப்ஸ் சமயக் கவுன்சிலின் தலைவரான இஸ்ஸுதீன் காஸி, லியோனின் கிறிஸ்தவ தலைமைக்குருவான கார்டியன் பார்பரியன், ஆய்வாளரும் உளவியலாளருமான ஐனெஸ் சாபி, வானிலை ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான கில் அடெம் மற்றும் விஞ்ஞான சமயப் பிரதானிகள் பலரின் பங்களிப்புடன் நடத்தப்படவுள்ளது.

மனித உலகப் பார்வையை மாற்றியமைப்பதில் சமயத்தினதும் விஞ்ஞானத்தினதும் பங்களிப்பு பற்றி ஆராய்தல், விஞ்ஞானம் மற்றும் சமயம் என்பவற்றிலான உலகின் செல்வாக்கு, மற்றும் விஞ்ஞான உண்மைகள், மனிதக் கண்டுபிடிப்புகள் என்பவற்றை நோக்கிய சமயத்தின் தோரணை என்பன இக்கருத்தரங்கினது ஆய்வுப் பொருள்களில் சிலவாகும்.

 

 

 

குர்ஆன் சுன்னாவின் ஒளியில் நவீன பொருளியல் பற்றிய உரையாடல்

மும்பையில் அமைந்துள்ள மர்கஸுல் மஆரிப் கல்வி மற்றும் ஆய்வு நிலையம் (ஆஆநுசுஊ), குர்ஆன் சுன்னாவின் ஒளியில் நவீன பொருளியல் எனும் தலைப்பில் உரையாடுவதற்கான  கருத்தரங்கொன்றை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்துள்ளது என அந்நிலையத்தின் பணிப்பாளர் எம்.பி. கஸ்மி தெரிவித்தார்.

மர்கஸுல் மஆரிப் கல்வி மற்றும் ஆய்வு நிலையம் ஒழுங்கு செய்துள்ள இக்கருத்தரங்கில் முன்னணியிலுள்ள முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் நவீன பொருளியலாளர்கள் கலந்து கொண்டு, இந்தியாவின் பொருளியல் முறைமையை விருத்தி செய்வதில் முஸ்லிம்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வர்.

இந்நிகழ்ச்சி, 2010 ஜனவரி 9ம் திகதி பி.ப. 2.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை, மும்பையிலுள்ள நிலையத்தின் அலுவலகக் கட்டிடத்தில் இடம்பெறும் என மேலும் அவர் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next