சமுகம்யாசீன் தொடர்ந்து கூறுகையில், தொடர்ச்சியாக இயங்கும் பொது மருத்துவவமனைகளைத் தவிர்த்து, நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்களுக்கு மேலாக இயங்கக்கூடிய 10 தற்காலிக சுகாதார நிலையங்கள், மஸ்ஜிதுந் நபவியைச் சூழ இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

நஹ்ஜுல் பலாகா மொழிபெயர்ப்பு மிக நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டும்

அரபு இலக்கியத்தில் அதியுயர் சிறப்பு மிக்க நஹ்ஜுல் பலாகாவை மொழிபெயர்ப்பது, முழு மனதுடனான கடும் உழைப்பு அவசியப்படக் கூடிய மிகப் பெறுமதி வாய்ந்த பணியாகும் என, ஈரானின் பிரதான மார்க்க அறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

'நஹ்ஜுல் பலாகாவை அதன் தனித்துவமான பாணியில் பிறிதொரு மொழிக்குப் பெயர்ப்பதென்பது மிகக் கடினமான ஒரு பணியாகும். அரபியிலும் பெயர்க்கப்படக் கூடிய மொழியிலுமாக இரு மொழிகளிலும் நல்ல பாண்டித்தியம் உள்ள, நஹ்ஜுல் பலாகாவைப் பற்றிய போதிய நிபுணத்துவம் உள்ளவர்களே இப்பெரும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்' என அவர் தெரிவித்தார். இஸ்லாமிய சிந்தனை நெறிகளுக்கான சர்வதேசப் பேரவையின் (WFPIST) செயலாளர் நாயகம் ஆயத்துல்லாஹ் முஹம்மத் அலி தஸ்கீரி அவர்கள், 'நஹ்ஜுல் பலாகாவை வெளிநாட்டு மொழிகளுக்கு மொழிபெயர்த்தல்' தொடர்பான விசேட அமர்வில் கலந்து கொண்டு நேற்று இக்கருத்தை வெளியிட்டார்.

இஸ்லாமிய அறிவையும் மனிதவள விஞ்ஞானத்தையும் மொழிபெயர்ப்பதையும் விருத்தி செய்வதையும் செம்மைப்படுத்தும் நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வமர்வில், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் பலர் கலந்து கொண்டதுடன், நஹ்ஜுல் பலாகாவை வெளிநாட்டு மொழிகளுக்குப் பெயர்த்தல் தொடர்பான ஆலோசனைகளும் கருத்துக்களும் இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இப்பெறுமதி வாய்ந்த நூலை மொழிபெயர்ப்பவர்கள், அதன் எண்ணக்கரு, பாணி, கருத்தாழம், இலக்கிய நயம் தொடர்பில் மிகச் சிறந்த புலமையும் நுண்ணறிவும் கொண்டவர்களாக இருப்பது அவசியம் எனவும் ஆயத்துல்லாஹ் தஸ்கீரி குறிப்பிட்டார்.

அடிப்படை எண்ணக்கருக்களை சிதைக்கும் வகையில், முஸ்லிம் அல்லாத கீழைத்தேய அறிஞர்களால் பிழையாக குர்ஆனும் இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்க்கப்படுகின்ற செயற்பாடுகளையும் அவர் இதன் போது விமர்சித்தார்.

நஹ்ஜுல் பலாகா என்பது, இமாம் அலீ (அலை) அவர்களின் உரைகள், கடிதங்கள் மற்றும் மூதுரைகள் என்பவற்றை உள்ளடக்கிய, பிரபல ஷீயா அறிஞரான செய்யித் ராதி அவர்களால் பதினோராம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மிகப் பெறுமதி வாய்ந்த இஸ்லாமிய நூலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மனிதனும் உலகமும் கருத்தரங்கு பிரான்சில் நடைபெறவுள்ளதுback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next