சமுகம்பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆய்வாளரும் நஹ்ஜுல் பலாகா சிந்தனையாளருமான முஹம்மத் மஹ்தி ஜஃபரி மற்றும் SAMT வெளியீட்டகத்தின் பொறுப்பாளர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அஹ்மதி ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

நஹ்ஜுல் பலாகாவின் சிறப்புப் பகுதிகள், அதன் வரலாறு என்பவை தொடர்பான அறிமுகம் மற்றும் விளக்கம், அதன் ஆழமான எண்ணக்கரு, அதன் மொழிபெயர்ப்பு நுணுக்கங்கள், இதற்காக ஆற்றப்பட்டுள்ள பணிகளின் வரலாற்றுக் குறிப்புகள் எனும் தலைப்புகளிலும் அவ் ஒன்றுகூடலில் உரைகள் முன்வைக்கப்பட்டன.

ஒன்றுகூடலின் முடிவில், ஆற்றப்பட்ட உரைகள் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான பதில்களும் குறித்த வளவாளர்களால் வழங்கப்பட்டன.

ஹாஜிகளின் புதிய அலைகளுக்காக மதீனா தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது

பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள், மக்கா, மினா, அரபாத் மற்றும் முஸ்தலிபா ஆகிய இடங்களில் தமது ஐந்து நாள் கடமைகளைப் பூர்த்தி செய்தபின், நபி (ஸல்) அவர்களது சியாரத்தைத் தரிசிப்பதற்காக மதீனா நகருக்கு வருகை தந்துள்ளனர். சவூதியின் ஹஜ் அமைச்சும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பொது மற்றும் தனியார் நிறுவனங்களும், அந்த ஹாஜிகளை வரவேற்கவும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கவுமான ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.

ஹஜ்ஜுக்கு முன்னர் 800,000க்கும் அதிகமான யாத்திரிகர்கள் மதீனாவைத் தரிசித்திருந்தனர்.

மதீனாவிலுள்ள அமைச்சின் பணிப்பாளர் முஹம்மத் அப்துல் ரஹ்மான் அல்-பிஜாவி இது பற்றிக் குறிப்பிடும் போது, 'விமான, கடல் வழி யாத்திரிகர்களுக்கான வருகை மற்றும் புறப்படுதலுக்கான மத்திய நிலையம், கண்காணிப்பு மற்றும் பின்னூட்டல் நிருவாகம், இயக்க நிலையம், தனியார் வழிகாட்டல் நிலையம் மற்றும் பாதுகாப்புக் குழு என்பன அல்லாஹ்வின் விருந்தினர்கள் வருகின்ற போது அவர்களை வரவேற்கவும், அவர்கள் தமது தாயகத்துக்குத் திரும்பும் போது அவர்களைப் பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கவும் தயாராக உள்ளன' என்றார்.

அவர் மேலும் தெரிவத்ததாவது, 'அமைச்சு மற்றும் ஏனைய அரச, தனியார் நிறுவனங்கள் அனைத்தும், ஹாஜிகள் மதீனாவில் தங்கியிருக்கும் போது ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ளன' என்றார்.

மதீனாவிலுள்ள சுகாதார சேவைகள் அமைச்சர் டொக்டர் காலித் பின் அப்துல் அஸிஸ் யாசீன் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, நகரின் பிரதான வீதிகளெங்கும் பொது மருத்துவமனைகளையும் நிரந்தரமான மற்றும் தற்காலிக சுகாதார நிலையங்களையும் நிறுவுவதனூடாக, யாத்திரிகர்களுக்கான வைத்திய சேவைகளை தனது திணைக்களம் விரிவுபடுத்தியுள்ளது என்றார்.

யாசீன் மேலும் குறிப்பிட்டார்: திணைக்களத்தின் ஹஜ் சுகாதாரத் திட்டம், நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதைச் சூழவுள்ள பகுதியிலும், நகரின் நுழைவு மற்றும் வெளியேறல் பகுதிகளிலும் உள்ள நிரந்தரமான மற்றும் தற்காலிக சுகாதார நிலையங்கள் ஊடாக போதிய சுகாதார சேவைகளையும் அவசர நிலைகளின் போதான முதலுதவிப் பணிகளையும் வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான தங்குமிடம், உணவு, குடிப்பு மற்றும் நோய்த்தடுப்பு ஏற்பாடுகள் என்பவை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next