சமுகம்குர்ஆனிய கலாசாரத்தை பிரசாரம் செய்வதிலான முதலாவது படிமுறை பயிற்சிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகும். குறிப்பாக, தீவிர அணுகுமுறைகள் தேவைப்படும் ஏழ்மையான பிராந்தியங்களில் குர்ஆனியப் பயிற்சிகளை வழங்குவதாகும்.

இவ்வாறு தெரிவித்த, லோர்ஸ்டானிலுள்ள குர்ஆனிய நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளணத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரான முர்வரித் ஹஸன்வன்த் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் காலங்களில் மாகாண மட்டத்தில் குர்ஆனிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவதற்கு இந்நிலையங்களினால் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இந்நிகழ்ச்சித் திட்டம் கொரம் ஆபாதிலுள்ள செய்யித் அலி காஸி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, குர்ஆனிய விரிவுரை தொடர்பான முறைமைகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்நிகழ்ச்சி மாகாணத்தில் குர்ஆனிய போதனைகளையும் கலாசாரத்தையும் பிரசாரம் செய்யும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

நஜ்ஜுல் பலாகா மொழிபெயர்ப்பு தொடர்பான விசேட ஒன்றுகூடல் தெஹ்ரானில் இடம்பெற்றது

இஸ்லாமிய கற்பித்தல், மற்றும் கலை இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் பிரசாரம் என்பவற்றின் மேற்பார்வைக்கான மத்திய நிலையம், 'ஏனைய மொழிகளுக்கு நஹ்ஜுல் பலாகாவை மொழிபெயர்த்தல்' தொடர்பான விசேட ஒன்றுகூடலொன்றை கடந்த நவம்பர் 30ம் திகதி கூட்டியது. இதில் ICRO வின் பிரதானியும் பெருந்தொகையான அறிஞர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

புனித அல்குர்ஆன் ஓதலைத் தொடர்ந்து, நஹ்ஜுல் பலாகாவின் சிறப்புக் குறித்து உரையாற்றிய மஹ்தி முஸ்தபாவி, 'அது மிகப் பெறுமதியான இஸ்லாத்தின் பரம்பரைச் சொத்து' என்றார்.

அத்துடன், இஸ்லாமிய சிந்தனை நெறிகளுக்கான பேரவையின் செயலாளர் நாயகம் ஆயத்துல்லாஹ் முஹம்மதலி தஸ்கீரியின் உரையும் அங்கு இடம்பெற்றது. அவர், குர்ஆன் மற்றும் நஹ்ஜுல் பலாகா மொழிபெயர்ப்பு பற்றிய தனது கருத்துக்களை அதில் முன்வைத்தார். நஹ்ஜுல் பலாகா நிறுவனத் தலைவர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் தீன்பர்வர் அவர்கள், நஹ்ஜுல் பலாகாவை மொழிபெயர்த்து வெளியிட வேண்டியதன் அவசியம் பற்றி தனதுரையில் எடுத்துக் கூறினார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next