சமுகம்அவர் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் 2010ம் வருடம் கல்விக்கான வருடமாக இருக்க வேண்டும். குர்ஆனிய ஆய்வுகள், இஸ்லாமியக் கோட்பாடுகள், நீதித்துவம், அரபு மொழி, நபித்துவப் பாரம்பரியம் மற்றும் வாழ்க்கைக்கும் உரையாடலுக்குமான திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான பெருந்தொகையான இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இஸ்லாமிய சமூகங்களிலிருந்து வறுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் ஸக்காத் நிதியமொன்றை நிறுவுவதற்கான அழைப்பையும் அவர் விடுத்தார்.

இஸ்லாத்தில் வருமானத்துறை தொடர்பாகத் தெளிவுபடுத்துவதும், மக்கள் தமது பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்றும்படி ஊக்குவிப்பதும் மஸ்ஜித் இமாம்களதும் பிரசாரகர்களதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

ஜேர்மனியில் ஈரானிய வாரப்பத்திரிகையின் புதிய இதழ் வெளியிடப்பட்டது

ஜேர்மனின் கலாசார, இஸ்லாமிய மற்றும் சமூகச் செய்திகளையும், ஈரானின் கலாசாரச் செய்திகளையும் உள்ளடக்கிய, ஜேர்மனியிலுள்ள ஈரான் கலாசாரப் பிரிவின் சமய மற்றும் சமூகவியல் வாரப்பத்திரிகையின் 22ஆவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய உலகுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மாநாடு, ட்ரெஸ்டன் கோர்ட் பகுதியில் மார்வ் அல்ஷெர்பினிக்கான நினைவுத்தூபியை நிறுவுதல், ஜியோத் நிறுவனத்தில் ஜேர்மனின் மஸ்ஜித் இமாம்களுக்கான கல்வியியல் பாடநெறி, பாடன் மற்றும் வர்டம்பேர்க் மாகாணங்களில் சமய அறிவுறுத்தல்கள், மற்றும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான நட்புறவு குறித்த ஜேர்மன் முஸ்லிம் கவுன்சில் மத்திய நிலையப் பணிப்பாளரின் அழைப்பு என்பன இவ்விதழில் வெளிவந்துள்ள கலாசார மற்றும் இஸ்லாமிய செய்திகளுள் பிரதானமானவையாகும்.

ஈரானிய நிலையத்தினால் வெளியிடப்படும் இவ்வாராந்தப் பத்திரிகை, ஜேர்மனியில் இடம்பெறும் கலாசார மற்றும் சமூகவியல் நிகழ்வுகளையும், இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவை ஏற்படுத்துவதற்கும் முரண்பாடுகளைக் களைவதற்குமான முயற்சிகளையும் பதிவு செய்வதையும், சமயங்கள் மற்றும் இனக்குழுக்களிடையே சமாதான வாழ்வை நிலைநிறுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

 

குர்ஆனிய கலாசாரத்தை பிரசாரம் செய்வதற்கான முதலாவது படிமுறை அது தொடர்பான பயிற்சியாகும்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next