சமுகம்ஆஷூரா தொடர்பான பெருந்தொகையான கண்காட்சிகள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பல பகுதிகளில் இடம்பெற்றன.

ஆப்கான் வொய்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் தகவலின்படி, நூல்கள் புகைப்படங்கள், பதாதைகள் போன்றன இக்கண்காட்சிகளின் போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இது முஹர்ரம் ஏழாம் நாளிலிருந்து ஆரம்பமாகியது.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது ஷஹாதத்தை நினைவுகூரும் பொருட்டு, காபூலிலுள்ள காதமுந்நபிய்யீன் இஸ்லாமியக் கல்லூரியில் மன்றம் ஒன்றும் இடம்பெற்றது. கவிஞர்கள் மற்றும் சமய அறிஞர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தானில் ஆஷூரா கலாசாரத்தை பிரசாரம் செய்வது தொடர்பாகக் கலந்துரையாடினர்.

ஆஷூராவுக்கு அண்மிய நாட்களில், ஆப்கானிஸ்தானின் வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆஷூரா தொடர்பான விசேட நிகழ்ச்சிகளை ஒலி-ஒளி பரப்புச் செய்ததுடன், ஈராக்கிய புனித நகரங்களான கர்பலா மற்றும் நஜப் பகுதிகளில் இடம்பெற்ற துக்க நினைவுகூரல் நிகழ்வுகளை நேரடி அஞ்சல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில், மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் அதிகமானோர் ஷீயாக்களாவர்.

 

ஜோர்டானில் மஸ்ஜித் இமாம்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்

ஜோர்டான் மஸ்ஜித்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள், மற்றும் பிரசாரகர்கள் ஆகியோருக்கான வருடாந்த ஒன்றுகூடல் இர்பித் நகரிலுள்ள நிதிவள அலுவலகத்தில் இடம்பெற்றது என அல்துஸ்தூர் செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

அலுவலகத்தின் பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்றுகூடலில், ஜோர்டானிய சமய பிரசாரகர்கள் மற்றும் கல்விமான்கள் உள்ளிட்ட 1200க்கும் அதிகமான ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

இவ் ஒன்றுகூடலில் உரையாற்றிய ஜமால் பதைனாஹ், முஸ்லிம் பிரசாரகர்கள் மற்றும் மஸ்ஜித் ஆளுமைகளின் பங்களிப்புகள், சமூக வாழ்க்கைக்கு அவசியமாகவுள்ள சமய நிலையங்களினதும் மற்றும் இஸ்லாத்தினதும் குறிக்கோள்களை அடைவதில் வகிக்கும் பாத்திரம் பற்றி விபரித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next