சமுகம் 

 

ரபாத்தில் குர்ஆனிய ஆய்வு நிலையம்

குர்ஆனிய ஆய்வுகளுக்கான ஒரு நிலையத்தை நிறுவுவதற்கு மொரோக்கோவின் அல் முஹம்மதிய்யா முஸ்லிம் அறிஞர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது என அல்மக்ரிபிய்யா தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

சங்கத்தின் செயலாளர் நாயகம் அஹ்மத் இபாதியின் கருத்துப்படி, இந்நிலையம் தலைநகர் ரபாத்தில் நிறுவப்படவுள்ளது.

சர்வதேசத் தரம் வாய்ந்த குர்ஆனிய ஆய்வுகளுக்கான வாய்ப்பை வழங்குவதுடன், பூகோளம், மனிதனும் வாழ்க்கையும், குர்ஆனிய எண்ணக்கருக்களும் கலைச்சொற்களும் போன்ற விடயங்கள் தொடர்பான பயனுள்ள ஆய்வுக் கற்கைகளை மேற்கொள்வதற்கான விசேட நிலையமாகவும் இது இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இபாதி தொடர்ந்து கூறுகையில், இந்நிலையம் பல்கலைக்கழகங்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளிலுள்ள அறிவியல் நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து குர்ஆனிய ஆய்வுக் கற்கைகளை நடத்தும் என்றார்.

அறிவியல் ஒன்றுகூடல்களையும், மாநாடுகளையும் நடத்துவது, அரபு ஆங்கிலம் பிரெஞ்ச் மற்றும் ஸ்பானிய மொழிகளில் குர்ஆனியக் கருப்பொருள்கள் பற்றி விளக்கும் ஆக்கங்களை வெளியிடுவது போன்ற பணிகளையும் இந்நிலையம் மேற்கொள்ளும் என மேலும் அவர் தெரிவித்தார்.

மொரோக்கோ, வட ஆபிரிக்காவிலுள்ள, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் அரபு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

காபூலில் ஆஷூரா கண்காட்சிகள்back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next