சமுகம்மக்காவில் நபித்துவப் பாரம்பரியம் தொடர்பான ஒன்றுகூடல் ஆரம்பம்

நபி (ஸல்) அவர்களது பாரம்பரியங்கள் (சீறா) தொடர்பாக ஆராயும் ஒன்றுகூடல் தொடர்கள் புனித மக்காவில் நேற்று ஆரம்பமாயின.

அல்வதன் செய்திப் பத்திரிகையின் தகவலின்படி, மக்கா பொது அலுவலகத்துடன் இணைந்த இஸ்லாமிய தகவல் திணைக்களத்தினால், சமூகக் குழுக்களுக்கு இஸ்லாமிய ஒழுக்கத்திற்கான மிகச் சிறந்த முன்மாதிரியாக நபியவர்களது பண்புகளை அறிமுகப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இவ் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நபித்துவப் பாரம்பரியங்களினூடாக இஸ்லாமிய கலாசாரத்தையும் பெறுமானங்களையும் பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், இஸ்லாத்தைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளையும் பழிகளையும் தடுக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்திய அலுவலகம், 'இந்நிகழ்ச்சி, சுதேச பெண்களுக்கு மாத்திரமானதல்ல, மாறாக இந்நகரில் வசிக்கும் சிறுபான்மை இனப் பெண்களுக்கும் உரியதாகும்' எனத் தெரிவித்துள்ளது.

மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் கலாசார மற்றும் தகவல் திணைக்களத்தின் விரிவுரையாளர் காலித் பின் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்குறைஷி, 'எனது தொழுகை, எனது விமோசனம்' எனும் தலைப்பில், ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் ஒரு விரிவுரையை நடத்தினார்.

இந்த இரண்டு வார நிகழ்ச்சியின் முதலாம் அமர்வில் பெருந்தொகையான பெண்களும் மாணவிகளும் மற்றும் பாடசாலை முகாமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

'இஸ்லாத்திலும் மேற்கிலும் பெண்களின் சுதந்திரம்' பற்றிய கலந்துரையாடல் அம்மானில்

'இஸ்லாத்திலும் மேற்கிலும் பெண்களின் சுதந்திரம்' எனும் தலைப்பிலான சந்திப்பொன்று, ஜோர்டானின் தலைநகர் அம்மானில், குர்ஆனின் அறிவியல் அற்புதம் தொடர்பான சிரியாவின் பேராசிரியர் முஹம்மத் ராதிப் அந்நப்லுசியின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

அல்துஸ்தூர் செய்திப் பத்திரிகையின் கருத்துப்படி, அம்மானின் கலாசார இஸ்லாமிய சங்கம் இந்நிகழ்ச்சியை பி.ப. 5.30 மணிக்கு நடத்தவுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next