சமுகம்இப்பயிற்சிநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வோர், அதில் கலந்து கொண்டமைக்கான தாருல் குர்ஆன் அல்கரீம் நிலையச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வர். தற்போது நாடு முழுவதிலும் சுமார் 300 நூர் ஹவ்ஸ்கள் உள்ளன. வருட முடிவில் இவை 450 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குர்ஆனின் பார்வையில் சர்வதேச உறவுகள் தொடர்பாக ஆராயும் புதிய நூல் உயர் ஆயத்துல்லாஹ் ஜவாத் அமலி அவர்களினால் எழுதப்பட்ட 'குர்ஆனின் பார்வையில் சர்வதேச உறவுகள்' எனும் நூல், எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என ஆயத்துல்லாஹ்வின் ஆக்கங்களுக்கான பதிப்பாளர் இக்னாவுக்குத் தெரிவித்தார். பதிப்பாளர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அலி இஸ்லாமி கூறும் போது, இந்நூல் முஸ்லிம் உம்மாஹ்வுக்கும் சமய நம்பிக்கைகளைப் பின்பற்றுவோருக்கும் இடையிலான உறவுகளை ஆராய்கின்றது என்றார். முஸ்லிம்களின் உறவுகள் மூன்று பகுதிகளில் ஆராயப்படுகின்றன: அவை, முஸ்லிம்களுடனான உறவுகள், சமய நம்பிக்கைகளைப் பின்பற்றுவோருடனான உறவுகள், முழு மனித சமூகத்துடனுமான உறவுகள் என்பவையாகும் எனவும் அவர் தெரிவித்தார். இஸ்லாமிய உம்மாஹ்வின் அனைத்து அங்கத்தவர்களும் தமக்கிடையில் சகோதரத்துவ உறவை வளர்த்துக் கொள்ளும்படியான அல்குர்ஆனின் அழைப்பை ஆயத்துல்லாஹ் அவர்கள், தமது இந்நூலில் வலியுறுத்தியுள்ளார். புனித அல்குர்ஆன், முஸ்லிம்களை ஏனைய சமயங்களைப் பின்பற்றுபவர்களுடனும் சமாதானமான நல்லுறவைப் பேணுமாறும், முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் புரிபவர்கள், முஸ்லிம்களை அவர்களது தாயகத்திலிருந்து விரட்டியவர்கள் தவிர்ந்த ஏனையோருடன் சமாதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது என்றும் அவர் கூறினார். இந்நூல், புனித கும் நகரில் வைத்து, இஸ்ரா வெளியீட்டகத்தினால் வெளியிடப்படவுள்ளது.
|