சமுகம்மனிதப் பண்பியல் வளர்ச்சி குர்ஆனின் அடிப்படையில் அமைய வேண்டும்

மனிதனின் அனைத்துப் பண்புகளினதும் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ள புனித அல்குர்ஆனின் சிந்தனையின் அடிப்படையில், மனிதர்களின் பண்பியல் வளர்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆய்வாளரும் அறிஞருமான மர்யம் முஃமினுல் இஸ்லாம் இக்னாவுக்குத் தெரிவித்தார்.

மனிதப் பண்பியல்புகளின் மாற்றத்திற்கான தேவை பற்றி அண்மையில் உரையாற்றிய இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவரின் உரையை மேற்கோள் காட்டிய அவர், தற்போது எமது பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்ற பெரும்பாலான மனிதப் பண்பியல் கற்கைநெறிகள் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் தெரிவித்தார்.

மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஞ்ஞானங்கள் மேற்கின் கலாசாரத்தையும் வாழ்க்கை நடைமுறைகளையும் தழுவியதாகவே காணப்படுகின்றன எனக் கூறிய அவர், மேற்கில் அனைத்து மனித நடவடிக்கைகளும் சடவாத ரீதியிலேயே நோக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

புனித அல்குர்ஆன் மற்றும் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களது பாரம்பரியங்கள் என்பவற்றிலிருந்து உருவான இஸ்லாமிய விஞ்ஞானங்களே, இன்று மனிதன் எதிர்நோக்கும் எல்லா விதமான வினாக்களுக்கும் பிரச்சினைகளுக்குமான விடைகளையும் தீர்வையும் கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இஸ்லாமிய அடிப்படையில் தோற்றுவிக்கப்படும் பெரும்பாலான மனிதப் பண்பியல் நிறுவனங்கள் பிற்பாடு மேற்கின் கலாசாரங்களுக்கே அடிமையாகி விடும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விடுகின்றது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

குர்ஆன் கற்பித்தற் பயிற்சி நெறிகள் நாடு முழுவதும் நடைபெறவுள்ளன

2010 மார்ச் 20ம் திகதியுடன் முடிவடைகின்ற ஈரானிய வருடத்தின் இறுதிப் பகுதியில், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் குர்ஆன் கற்பித்தற் பயிற்சி நெறிகள் நடைபெறவுள்ளன.

மஸ்ஜிதுகளின் கலை மற்றும் கலாசார நிலையங்களின் நிருவாகம் மற்றும் தாருல் குர்ஆன் அல்கரீம் நிலையம் என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், 25 பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் நடைபெறும் பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொள்வார்கள்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வோர், தஜ்வீத் முறையில் குர்ஆன் ஓதுவதற்கான அடிப்படை அறிவு பெற்றிருப்பதுடன், பயிற்சிநெறியின்  முடிவில், மஸ்ஜித்களிலுள்ள நூர் ஹவ்ஸ் நிலையங்களில் குர்ஆனைக் கற்பிக்கும் பணியிலும் குறிப்பிட்ட காலம் ஈடுபட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next