சமுகம்சாபிலி குழு, காஸா எனும் சங்கேதப் பெயருடைய ஓபரேட்டிங் சிஸ்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சாபிலி என்பது முஸ்லிம்களுக்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உபுண்டு முஸ்லிம் பதிப்பின் புதிய பெயராகும்.

சாபிலி 9.10 ஆனது 2 பதிப்புகளுடன் டிவிடியில் கிடைக்கின்றது.

சிறிய பதிப்பு: (1 ஜிபி அளவுள்ளது) கலைப்படைப்புகள், இஸ்லாமிய விண்ணப்பங்கள் உள்ளடங்கலான சாபிலி பக்கேஜையும் மற்றும் அரபு சப்போர்ட்டையும் இது கொண்டுள்ளது.

முழுப் பதிப்பு: (2.8 ஜிபி அளவுள்ளது) மேலுள்ளதுடன், மல்டிமீடியா, கல்வி மற்றும் நானாவிதமான பகுதிகளையும் குர்ஆன் ஓதல் ஒலிப்பதிவுகளையும் கொண்டுள்ளது. முஹம்மத் சித்தீக் மின்ஷாவி, ஹுஸைபி, சஅத் அ;ல்கமதி மற்றும் மிஷரி ராஷித் அலபசி ஆகியோரின் கிறாஅத்துகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பின் புதிய வசதிகள்: நூர் அப்ளிகேஷன்: புதிய குர்ஆன் ப்ரௌசர், மற்றும் பல நூல்கள், பசூல் அப்ளிகேஷன்: நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சீறா என்பனவாகும்.

 

சர்வதேச குர்ஆன் போட்டியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் குவைத் நடத்தவுள்ளது

குர்ஆன் மனனம் மற்றும் ஓதல் என்பவற்றுக்கான குவைத்தின் சர்வதேசப் போட்டி நிகழ்ச்சி, அமீர் ஷெய்க் சபா அவர்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 2010 மார்ச் 11ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படும் என குவைத்தின் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

குவைத்தின் இப்போட்டி நிகழ்ச்சி, குர்ஆனை மனனமிடுவதை ஊக்குவிக்கும், குர்ஆனிய சேவைகளில் கலாசார மற்றும் முன்னோடித் தன்மைகளை வெளிப்படுத்தும், குர்ஆனிய அறிவை பரவச் செய்யும் அரசாங்கத்தின் நலன்புரிச் சேவைகளுக்கான நல்லதோர் உதாரணமாகும் என அமைச்சின் செயலாளரும் போட்டிக் குழுவின் தலைவருமான டொக்டர் ஆதில் அல்பலாஹ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

சரியான குர்ஆன் ஓதல்களை அரபுகளுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவதையும், குர்ஆன் மனனமிடும் பணிகளை ஊக்குவிப்பதையும் குர்ஆனியக் கற்கைகளை உற்சாகப்படுத்துவதையும் இப்போட்டி நோக்காகக் கொண்டுள்ளது என மேலும் அவர் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next