சமுகம்நவீன மனித உரிமைகள் எனும் எண்ணக்கரு சமய சிந்தனைகளைப் பின்புலமாகக் கொண்டுள்ளது என தனது உரையில கூறிய நாசிர் தொடர்ந்து உரையாற்றும் போது, விடுதலைக்கான உரிமை, தனியார் சொத்துரிமை, வாழ்தலுக்கான உரிமை என்பன அனைத்தும் சமய சிந்தனைகளின் அடியொட்டி எழுந்தவையாகும் என்றார்.

உங்களில் சிறந்த முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு தனது நாவினாலும் கைகளினாலும் தீங்கிழைக்காதவராவார் என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை மேற்கோள் காட்டிய அவர், இஸ்லாத்தில் மனித உரிமைகளுக்கு எத்தகைய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இது தெரிவிக்கின்றது என்றார்.

இன்று, இஸ்லாமிய அரசாங்கங்கள் நபி (ஸல்) அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்க முறைமைகளைப் பின்பற்றினால், மனித உரிமைகள் மற்றும் எவ்விடயங்களிலும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் எவ்விதப் பிரச்சினையும் எழாது எனக் கூறிய அவர், முஸ்லிம்கள் அல்குர்ஆனின் சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டு, மேற்கின் சிந்தனைகளுக்கு அடிமையானமையே தற்போதைய பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் என்றும் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.

இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்களின் கலைக்களஞ்சியம் இணையத்தளத்துக்குச் செல்கின்றது

ஷீயாக்களின் நான்காவது இமாம் ஹஸ்ரத் ஸஜ்ஜாத் (அலை) அவர்களின் ஷஹாதத் நினைவு தினத்தையொட்டி அவர்களது தகவல்கள் அடங்கிய கலைக்களஞ்சியம், ஹவ்ஸாநெட் இணையப்பக்கத்தின் உதவியினால் இணையத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இக்கலைக்களஞ்சியமானது இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கையைப் பற்றியுமான நூல்கள், ஆக்கங்கள், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் வினாவிடைகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கும்.

கர்பலா நிகழ்வின் போது இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்களின் நிலை, அவர்களது இமாமத், அவர்களது தோழர்கள், அவர்களது நற்பண்புகள், அவர்களது ஒழுக்கப் பயிற்றுவிப்புக்கள், அவர்களது அறிவியல் பணிகள், இலக்கியங்கள் மற்றும் கவிதைகளில் இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்கள், இமாம் பற்றி முஸ்லிம் சிந்தனையாளர்கள் அறிஞர்கள் ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் பல தலைப்புகளில் இக்கலைக்களஞ்சியத்தில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இமாம் அலி பின் ஹுஸைன் ஸஜ்ஜாத் (அலை) அவர்கள், ஹிஜ்ரி 95 ம் வருடம் முஹர்ரம் 12ம் நாளில் ஷஹீதாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலைக்களஞ்சியம் பின்வரும் இணைய முகவரியில் கிடைக்கும் http://www.hawzah.net/Hawzah/Subjects/Subjects.aspx?id=4929

காஸா செய்முறைவழித் தொகுப்பு வெளியிடப்பட்டதுback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next