சமுகம்துபாய் பெண்கள் கல்லூரியில் இஸ்லாமிய வரலாற்று வாரம்

துபாய் பெண்கள் கல்லூரி மாணவிகள், முதலாவது இஸ்லாமிய வரலாற்று வாரத்தை அனுஷ்டித்தனர். இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலங்களைப் பதிவு செய்யும் படங்கள், கட்டடங்கள் மற்றும் அறிவியல் வரைவுகள் என்பவற்றை இதன்போது காட்சிப்படுத்தினர்.

கல்லூரியின் ஏனைய துறைகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் இஸ்லாமிய வரலாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரலாற்றுத் துறை மாணவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி, அரபு மக்களின் வரலாறு எனும் கற்கைநெறியின் ஒரு பகுதியாக இடம்பெற்றதுடன், இஸ்லாமிய வரலாறு தொடர்பான விழிப்புணர்வையும் மாணவிகளிடையே ஏற்படுத்தியது.

பக்தாதின் பைத்துல் ஹிக்மாவிலிருந்து தோன்றிய பிரபல ஈரானிய முஸ்லிம் அறிஞர்களான அல்குவாரிஸ்மி, இப்னு சீனா, அல்ஹைதம் போன்றோர் பற்றிய சிறு ஆவணப்படுத்தல்களும் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

துபாய் பெண்கள் கல்லூரியின் வரலாற்றுக் கற்கைத்துறை, இளம் பட்டதாரிகள் மத்தியில் கல்வியியல் ஆய்வுத் திறன், விமர்சன நோக்கு, எழுச்சிமிக்க சிந்தனை என்பவற்றை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றது.

இஸ்லாமிய சமூகங்கள் எவ்வாறு தோன்றின, அவை எவ்வாறு வலுப்பெற்றன என்பவை பற்றிய விமர்சன ஆய்வுகளிலும் இக்கற்கைத்துறை ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இஸ்லாம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்

இஸ்லாம் மற்றும் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான பேரவையொன்று துருக்கியின் தலைநகர் அங்காராவில் நேற்று இடம்பெற்றது என ரிசாலேஹபர் தெரிவிக்கின்றது.

சமூகக் கற்கைகளுக்கான சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்பேரவையில், சமூக சேவை வல்லுனர் நாசிர் அகேசெல்மான் அவர்களின் விசேட சொற்பொழிவு இடம்பெற்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next