சமுகம்தமது அலுவலகம் துருக்கியின் இஸ்லாமிய விவகார அமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு ஆயத்தமாக உள்ளது எனவும் தலைவர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹஸன் ரப்பானி தெரிவித்தார்.

 

 

சமய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் ஈரான், இந்தோனேசியா கைச்சாத்து

ஜகார்டாவில் இடம்பெற்ற இரு நாடுகளுக்குமிடையில் சமய ஒத்துழைப்பு விவகாரங்களை விருத்தி செய்வதற்கான உடன்படிக்கையில் ஈரான் மற்றும் இந்தோனேசியா என்பன கைச்சாத்திட்டன.

இவ்வுடன்படிக்கையில், இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளை முன்னிலைப்படுத்துவதற்கான பேரவை மற்றும் இந்தோனேசியாவின் மஜ்லிசுல் உலமா ஆகிய அமைப்பினர் கைச்சாத்திட்டனர்.

பேரவையின் முக்கிய உறுப்பினரான ஆயத்துல்லாஹ் முஹ்ஸின் கும்மி, மஜ்லிசுல் உலமா சபை உறுப்பினர் உமிதான் ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

சமய, கலாசார மற்றும் கல்வியியல் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்காக இரு பகுதியினரும் இணைப்புக் கமிட்டியொன்றை உருவாக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய சிந்தனை மற்றும் இஸ்லாமிய ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு போன்ற பணிகளை இக்கமிட்டி மேற்கொள்ளும்.

ஈரான் மற்றும் இந்தோனேசிய உலமாக்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசிப்பதற்காக, விரைவில் தெஹ்ரானில் இது போன்ற மற்றொரு ஒன்றுகூடலை நடத்துவதற்கு இதில் பங்குபற்றியவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next