சமுகம்பிரபல முஸ்லிம் அறிஞரான யூசுப் கர்ளாவியும் கூட, எகிப்தின் இச்சுவர்க் கட்டுமானத்தை கண்டித்து, இது, இஸ்லாத்தினால் தடை செய்யப்பட வேண்டிய மிக அநீதியான செயல் என வர்ணித்துள்ளார்.

ரபா பகுதி காஸா மக்கள் வெளிச் செல்வதற்காக உள்ள ஒரேயொரு எல்லையாகும். இஸ்ரேலின் அழுத்தங்களுக்குக் கட்டுப்பட்டு அதனை எகிப்து மூடிவிட்டுள்ளது. இதனைத் திறந்து காஸா மக்களின் வாழ்வுரிமையைக் காக்க வேண்டுமெனவும் யூசுப் கர்ளாவி வேண்டியுள்ளார்.

அரபு லீக் மற்றும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு ஆகிய அமைப்புகள், இச்சுவர்க் கட்டுமானத்தைத் தடுக்கும்படி எகிப்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் 90000 மஸ்ஜித்களில் குர்ஆனியக் கல்வி

துருக்கியில் சுமார் 90000 மஸ்ஜித்கள் உள்ளன. அவையனைத்திலும் குர்ஆனிய கற்கைகள் இடம்பெற்று வருகின்றன.

துருக்கியின் சமய விவகார அமைப்பின் தலைவர் பேராசிரியர் அலி பர்துக் உக்லு, கும் இஸ்லாமியக் கல்லூரியின் இஸ்லாமிய பிரசாரக் காரியாலய நிருவாகிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

பேராசிரியர் பர்துக் உக்லு தொடர்ந்து கூறுகையில், துருக்கி முழுவதிலும் உள்ள மஸ்ஜித்களில் சுமார் பன்னிரண்டாயிரம் மாணவர்கள் கற்கின்றனர். சுமார் 103000 அறிஞர்கள் கல்வி, கலாசார மற்றும் ஆய்வுத் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், துருக்கி மக்களிடையே அண்மைக்காலமாக, அஹ்லுல்பைத் தொடர்பான ஆர்வமும் தேடலும் அதிகரித்து வருகின்றமையால், அது பற்றி கற்பதற்கான வாய்ப்புக்களை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வௌ;வேறு கலாசார, சமய, அறிவியல் துறைகளைக் கொண்ட ஈரானுக்கும் துருக்கிக்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பு பற்றி அவர் விபரித்தார்.

இஸ்லாமிய பிரசார அமைப்பின் தலைவர், தனதுரையில், உயர்வு மற்றும் புனிதத்துவம் என்பவற்றைப் பெறுவதற்கு இஸ்லாமிய உலகம் விஞ்ஞானத்தையும் அறிவையும் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது எனத் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next