சமுகம்ஒரு நூலை வெளியிடுவதெனில், முதலில் பேரவையின் நூலாக்கக் கவுன்சிலினால் அந்நூல் அங்கீகரிகப்பட வேண்டும். நூலாசிரியர்களால் எழுதி அச்சுக்குத் தயாராக உள்ள நூல்கள், இறுதிச் சரிபார்ப்புக்கு முன், இக்கவுன்சிலினால் பகுப்பாய்வு செய்யப்படும். அதன்பின்பே அச்சுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வெளியிடப்படவுள்ள நூல்களுள் 'மக்தல் இமாம் ஹுஸைன் (அலை) அந் ரவாயத் ஜதீதா' எனும் அரபு மொழியிலான நூல் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது ஷஹாதத் பற்றிய அற்புதமான வெளியீடாக அமையும் எனத் தெரிவித்த அவர், வெளியிடப்படவுள்ள இவ் 18 நூல்களும் துருக்கி, அரபு, பாரசீகம், ஆங்கிலம், ஸ்பானிஷ், பஷ்து, உர்து மற்றும் ஜோர்ஜியன் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளன என்றும் கூறினார்.

ஏனைய பரிசுத்த இமாம்களது வாழ்க்கை வரலாறுகளை விபரிக்கும் பெருந்தொகையான நூல்களை 33 மொழிகளில் எமது பேரவை வெளியிடத் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

 

காஸா எல்லைச் சுவரை எகிப்து நிறுத்த வேண்டும்

காஸா நெடுகிலும் அமைக்கப்பட்டு வருகின்ற இரும்புச் சுவர்க் கட்டுமானத்தை எகிப்து உடனடியாக நிறுத்த வேண்டுமென ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு நிறுத்துவது முற்றுகையிடப்பட்டுள்ள காஸா மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

காஸா மக்களுக்கு இருக்கின்ற மிகச் சிறிய நம்பிக்கையும் நிம்மதியும் இச்சுவரின் மூலமாக தகர்த்தெறியப்படும் என மேலும் அவர் தெரிவித்தார் என ரொய்டர் தெரிவிக்கின்றது.

எகிப்து இச்சுவர்க் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தி முற்றுகையை வாபஸ் பெற வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கின்றோம். மறுக்கும் பட்சத்தில், அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளினாலும் இது கண்டித்து எதிர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆஷூரா நிகழ்வையொட்டி லெபனானில் இடம்பெற்ற பொது வைபவமொன்றில், ஒன்றுகூடியிருந்த பல்லாயிரக் கணக்கான லெபனானிய ஷீயா முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

அவரது உரைக்கு சற்றுமுன்பு இடம்பெற்ற விசேட வைபவத்தின் போது, அங்கு குழுமியிருந்தவர்கள், அமெரிக்கா அழியட்டும், இஸ்ரேல் அழியட்டும் போன்ற கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next