சமுகம் 

குர்ஆனின் அற்புதம் தொடர்பான சர்வதேச மாநாடு பைய்ரூத்தில் திட்டமிடப்பட்டுள்ளது

புனித அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதம் தொடர்பான சர்வதேச மாநாடொன்றை அடுத்த மாதம் லெபனான் தலைநகர் பைய்ரூத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என முஸ்தக்பல் செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

இம்மாநாடு, 'குர்ஆன் மற்றும் நபிகளாரின் சுன்னா என்பவற்றின் அற்புதங்களுக்கான சமூகம்' எனும் அமைப்பினால் ஜனவரி 7 முதல் 10 வரை நடத்தப்படும்.

இந்நான்கு நாள் மாநாடு, மருத்துவத்துறை, சட்டத்துறை, வானியல்துறை, புவியில் மற்றும் உயிரியல் உள்ளிட்ட புனித அல்குர்ஆனின் அற்புதங்கள் பற்றிய பல்வேறுபட்ட உண்மைகளை ஆராய்வதாக அமையும். கடல்சார் விஞ்ஞானத் துறையிலான அல்குர்ஆனின் அற்புதங்களும் இவற்றுள் அடங்கும்.

இம்மாநாட்டின் கருப்பொருளுக்கேற்ற ஆய்வுகளை முன்வைக்குமாறு லெபனான் மற்றும் உலகின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான அறிஞர்களும் குர்ஆன் ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது வாழ்க்கை தொடர்பான 18 நூல்கள் வெளியிடப்படவுள்ளன

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது நற்பண்புகள், நன்னடத்தைகள் தொடர்பாக ஆராயும் 18 நூல்கள், உலக அஹ்லுல்பைத் பேரவையினால் வெளியிடப்படவுள்ளன.

இது பற்றித் தெரிவித்த, பேரவையின்  கலாசாரப் பிரதிப் பொறுப்பாளர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அஹ்மத் சாலிக், இந்நூல்கள் 58 பாகங்களாக வெளியிடப்படவுள்ளன என்றார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next