சமுகம்2009ம் ஆண்டின் இஸ்லாமிய உலகின் கலாசாரத் தலைநகர் கைருவானை சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக, டிசம்பர் 17ம் திகதி ஆரம்பமான ஈரானிய குர்ஆன் வாரம், அந்நகரிலுள்ள அசாத் பின் பௌராத் கலாசார நிலையத்தில் டிசம்பர் 22ம் திகதி நிறைவு பெற்றது.

தூனிசியாவுக்கான ஈரான் தூதுவர், தூனிசியாவின் சமய விவகார அமைச்சர், கலாசார அமைச்சர் மற்றும் ஈரான் கலாசாரப் பொறுப்பதிகாரி ஆகியோரின் பிரசன்னத்துடன் இந்நிறைவு வைபவம் நடைபெற்றது.

இவ் குர்ஆனிய வாரம், தூனிசியாவிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தினால், நாட்டின் கலாசார அமைச்சின் ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில், இஸ்லாமிய எழுத்தணிக் கண்காட்சி, அல்ஹுதா குழுவினரின் இஸ்லாமிய கீதம் போன்ற பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முஹம்மத் ஹுஸைன் பூர்முயீனின் தலைமையிலான இக்குழு, நபி (ஸல்) அவர்களையும் அவர்களது பரிசுத்த அஹ்லுல்பைத்தினரையும் புகழ்ந்து அழகிய பாடல்களைப் பாடியது.

ஈரான் மற்றும் தூனிசியாவைச் சேர்ந்த 60 எழுத்தணிக் கலைஞர்களால் வரையப்பட்ட, நஸ்தலிக் மற்றும் கைருவானி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான எழுத்தணிப் படைப்புகள் அடங்கிய கண்காட்சி இந்நிகழ்வின் சிறப்பு வைபவமாக இடம்பெற்றது. இக்கண்காட்சி, தூனிசியாவின் தேசிய எழுத்தணி நிலையத்தில் இடம்பெற்றது.

 

2010 ஹதீஸ் கலண்டர் நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது

வருடத்தின் முக்கிய தினங்களைக் குறிக்கும் தகவல்களையும் மற்றும் பயனுள்ள ஹதீஸ்களையும் அரபு, பாரசீகம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் கொண்ட 2010ம் ஆண்டுக்கான கலண்டரை, தாருல் ஹதீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஹ்லுல்பைத் (அலை) அவர்களினது போதனைகளை உலகம் முழுவதற்கும் பிரசாரம் செய்யும் நோக்குடன் இக்கலண்டரை தமது நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, தாருல் ஹதீஸ் விஞ்ஞான கலாசார நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொறுப்பாளர் தெரிவித்தார்.

சர்வதேச, இஸ்லாமிய, ஷீயா மற்றும் ஈரானிய சிறப்புத் தினங்களைக் குறிக்கும் இக்கலண்டர், ஒவ்வொரு நாளுக்கும் பொருத்தமான அஹ்லுல்பைத்தினரின் ஹதீஸ்களையும் வழங்குவதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next