சமுகம்முஸ்லிம் உம்மாஹ்வுக்கு எதிராக சதித்திட்டங்களைத் தீட்டி வரும் ஐக்கிய அமெரிக்காவையும் சியோனிஸ்ட்டுகளையும் சவூதி அரேபியாவின் அறிஞர்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை இமாம்கள் ஆகியோர் கண்டிக்க முன்வர வேண்டும் எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

புனித அல்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் அடிப்படையில் செயற்படுகின்ற நாடு என்ற வகையில், ஈரான் இஸ்லாமியக் குடியரசு பெருமிதப்பட்டுக் கொள்கின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஐக்கியத்தை குலைக்கும் படியாகக் கருத்துக்களை பரப்பி வருகின்ற இந்த முப்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவ்வறிக்கை, சவூதி அரசாங்கத்தைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈராக்கிய ஷீயா சுன்னி மக்கள் இணைவு

ஈராக்கின் தென்நகரான பஸராவிலுள்ள ஷீயா சுன்னி முஸ்லிம் மக்கள் இணைந்து சென்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நடத்தி, ஆயத்துல்லாஹ் சீஸ்தானிக்கெதிரான சவூதி முப்தியின் அறிக்கையைக் கண்டித்தனர்.

பஸரா செய்தி ஸ்தாபனத்தின் தகவலின்படி, பஸராவின் அல்ஷஹீத் தாஹா மஸ்ஜிதில் இடம்பெற்ற இந்த ஜும்ஆத் தொழுகைக்கு ஈராக்கிய மார்க்க நிபுணர்கள் அறிஞர்கள் உள்ளுர் அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

தென் ஈராக் சுன்னி அறிஞர்களின் தலைவரான அப்துல் வஹ்ஹாப் காலித் அல்முல்லா இத்தொழுகையினை நடத்தினார். அவர் தனது குத்பாப் பேருரையில், சவூதி முப்தியின் அறிக்கையைக் கண்டித்ததுடன், சர்வதேச இஸ்லாமிய ஐக்கியம் பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.

சவூதியின் ரியாத்திலுள்ள அல்பவார்தி மஸ்ஜிதில் கடந்த ஜனவரி முதலாம் திகதி இடம்பெற்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆற்றிய குது;பாப் பேருரையின் போது, சவூதி முப்தி அல் ஆரிபி, ஈராக்கின் உயர் ஆயத்துல்லாஹ் அலி அல்சீஸ்தானி தொடர்பாக அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next