சமுகம்எனினும், இப்பல்கலைக்கழகம் எந்நகரில் நிறுவப்படும் என்பதை ஹைதர் பசே உறுதியாகத் தெரிவிக்கவில்லை.

மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மாலைதீவில் காணப்படுகின்றன

மாலைதீவு பிக்ஹுக் கல்வி நிலையத்தின் உறுப்பினர் அஹ்மத் நசீம் குறிப்பிடும் போது, பிரத்தியேக அறிஞர்கள் சிலரால் மொழிபெயர்க்கப்பட்ட மிகச் சிறந்த அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மாலைதீவில் உள்ளன என்றார்.

மாலைதீவின் இஸ்லாமிய அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய நசீம் தொடர்ந்து கூறுகையில், 'இவற்றுள் ஷைய்க் அபூபர்குரு இப்ராஹீம் அவர்களின் மொழிபெயர்ப்பு மிகச் சிறந்ததாக உள்ளது. தற்போது அது பகுப்பாய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது' என்றார்.

மாகாண அமைச்சர் முஹம்மத் ஷமீம் அலி சயீத் குறிப்பிடும் போது, 'அதாலத் கட்சி, புனித அல்குர்ஆனின் 30 பாகங்களில் 20 பாகங்களை மொழிபெயர்த்துள்ளது. இப்பணியில் அதாலத் கட்சி உறுப்பினர்களான அறிஞர்கள் மாத்திரமல்லாமல், தேசிய ரீதியாக முக்கியத்துவம் பெற்ற அறிஞர்களும் பங்கெடுத்துள்ளனர்' என்றார்.

அதாலத் கட்சியில், பெரும் சமய அறிஞர்களும் குர்ஆனியத் துறையில் டொக்டர் பட்டம் பெற்றவர்களும் அங்கத்துவம் வகிக்கின்றனர். அக்கட்சியினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அல்குர்ஆன் மொழிபெயர்ப்பையும் அதனுடன் இணைந்த விரிவுரைகளையும் 'ஷெய்குகளின் ஷெய்க்' எனப் புகழப்படும் ஷெய்க் இஸ்மாயில் முஹம்மத் அவர்கள் சரிபார்த்துள்ளார்கள்.

மார்க்க அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணிகளை வெளியிடுவதற்கு பெரும் தொகைப் பணம் தேவைப்படுகின்றது. செல்வந்தர்கள் தமது செல்வத்தை இந்நற்பணிகளுக்கு வழங்க முன்வருவார்களானால், மேலும் பல சமய அறிஞர்கள் தமது படைப்புகளை சமூகத்துக்கு வழங்குவார்கள் எனவும் நசீம் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், நலன் விரும்பிகளினால் வழங்கப்பட்ட MRF 100000 பெறுமதியான பணம் அமைச்சிடம் உள்ளது எனக் கூறியதுடன், அவை இஸ்லாமிய விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் எனத் தெரிவித்தார். அத்துடன், அவற்றை வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

 

தூனிசியாவில் நடைபெற்ற ஈரானிய குர்ஆன் வாரம் நிறைவுபெற்றதுback 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next