சமுகம்ஆயத்துல்லாஹ் மராஷி நஜபி அவர்களை ஞாபகிக்கும் வைபவம்

உயர் ஆயத்துல்லாஹ் மராஷி நஜபி அவர்களின் 20ஆவது சிரார்த்த தினத்தையொட்டிய வைபவமொன்று, அவரது சேவைகளையும் பணிகளையும் நினைவுகூரும் வகையில்,  எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 21 என திகதியிடப்பட்டுள்ள இவ்வைபவம், இஸ்லாமிய விஞ்ஞான மற்றும் கலாசார நிலையத்தினால், புனித கும் நகரில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில், ஆயத்துல்லாஹ் அவர்களின் வாழ்க்கை, பண்புகள், சமய நிபுணத்துவம், மற்றும் சட்டத்துறை ஆற்றல் என்பவை பற்றிய விரிவுரைகளும் உரைகளும் இடம்பெறும். அவரது வாழ்க்கை குறித்த இரண்டு நூல்களும், இந்நிலையத்தினால் முதன்முறையாக இவ்வைபவத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளன.

இவ்வைபவம், ஆயத்துல்லாஹ் அவர்களின் 25ஆவது நினைவுதினத்தையொட்டி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச மாநாட்டுக்கான ஆரம்ப பைவமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹ்லுல்பைத் பல்கலைக்கழகம் துருக்கியில் ஸ்தாபிக்கப்படவுள்ளது

துருக்கியின் BTP கட்சி, அஹ்லுல்பைத் பல்கலைக்கழகத்தை அந்நாட்டில் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளது என ஈ-ஹபராஜன்சி செய்திஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது ஷஹாதத்தை நினைவுகூரும் முஹர்ரம் வைபவமொன்றில் கலந்து கொண்டு, இமாமவர்களது ஷஹாதத் குறித்து தனது அனுதாபத்தைத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர், 'இப்பல்கலைக்கழகம் நாட்டில் இஸ்லாமிய ஐக்கியத்துக்கான ஒரு குறியீடாக அமையும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

'துருக்கியிலுள்ள ஷீயா சுன்னி முஸ்லிம்கள், இந்நாட்டில் மிக நீண்டகாலமாக சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வரும் மகிழ்ச்சிகரமான வரலாற்றைக் கொண்டவர்கள்' என்று கூறிய தலைவர் ஹைதர் பசே தொடர்ந்து கூறும் போது, 'இவ் அஹ்லுல்பைத் பல்கலைக்கழகம், ஷீயாக்களுக்கும் சுன்னாக்களுக்கும் இடையில் உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்' என்றார்.

'அஹ்லுல்பைத் கோட்பாடுகளை விரும்பும் பெரும்பாலான துருக்கியர்கள், அவை பற்றி அறியவும் கற்றுக் கொள்ளவும், வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உருவாக்கம், இத்தகையோரின் சிரமங்களுக்கு பரிகாரமாகவும், அவர்களது ஆர்வத்துக்கு சிறந்த வாய்ப்பாகவும் அமையும்' என்றும் அவர் தெரிவித்தார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next