சமுகம்இந்த செயற்றிட்டத்தின் மூலமாக உலகில் ஏற்படும் இஸ்லாத்தின் பரவல் பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கையில், 'இணையத்தளத்தில் நுழைவது படிப்படியாக உலகில் இலகுவான ஒன்றாகவும் அதிகம் தாக்கம் செலுத்தும் ஒன்றாகவும் மாறிவிட்டது. எனவே, இம்மூன்றாம் மில்லேனிய யுகத்தில், இஸ்லாமியக் கருக்களைப் பரப்புவதற்கும், குர்ஆனிய அறிவை வழங்குவதற்கும், உலகில் இஸ்லாத்தை பரவச் செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியும்' என்றார். 'இஸ்லாம் பற்றிய முழுமையான தகவல்கள், உலக இஸ்லாமிய அறிஞர்களினால் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாத்தின் புதிய விளக்கங்கள், குர்ஆனிய எண்ணக்கருக்களிலான ஆய்வுகள், புனித அல்குர்ஆன் வசனங்களின் ஓதல்கள், குர்ஆனிய விளக்கங்களைப் பயன்படுத்தும் முறைமைகள், குர்ஆனை மனனமிடுதல் மற்றும் பல விடயங்களை குர்ஆன் ஈ நகரம் வழங்கும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, உலகிலுள்ள இணையத்தளப் பாவனையாளர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்' என்றார். ஹஜ்ஜின் போது 421 குர்ஆனிய நிகழ்ச்சிகள் குர்ஆனிய பிரதிநிதிகள் குழுவின் தலைவர் முஹம்மத் ஹுஸைன் சயீதியான் குறிப்பிடும் போது, 'இதுவரை, ஈரானின் குர்ஆனிய பிரதிநிதிகள் குழுவினால் 350க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் ஹஜ்ஜின் போது நிகழ்த்தப்பட்டுள்ளன' என்றார். ஆயத்துல்லாஹ் ரேஷஹ்ரி அவர்களுடனான சந்திப்பின் போது இடம்றெ;ற உரையாடலில், ஹஜ் யாத்திரை அலுவல்களுக்கான ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி சயீதியான் மேலும் கூறியதாவது, 'இவ்வருட ஹஜ் காலத்தின் முடிவில், ஈரானின் குர்ஆனிய பிரதிநிதிகள் குழுவினால் நிகழ்த்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 421ஐ அடையும்' என்றார். 'இந்நிகழ்ச்சி, மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதிலும், மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலும், ஈரானியர் மற்றும் ஈரானியர் அல்லாத ஹாஜிகளுக்கு மத்தியிலும் நிகழ்த்தப்படும் குர்ஆனிய அமர்வுகளை உள்ளடக்கியிருக்கும். அத்துடன் குர்ஆனிய கருத்தரங்குகளும் ஒன்றுகூடல்களும் இடம்பெறும்' என அவர் தெரிவித்தார். இவ்வருட ஹஜ்ஜில் குர்ஆனிய பிரதிநிதிகளுக்கான அதிக பங்குகளை வழங்கியமைக்காக ஆயத்துல்லாஹ் ரேஷஹ்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்த சயீதியான், 'ஹஜ்ஜின் போது நிகழ்த்தப்படும் குர்ஆனிய நிகழ்ச்சிகளுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பிருக்கின்றது' என்றார். 'ஹாஜிகளுக்குப் பயனளிப்பதற்காக, இது போன்ற நிகழ்ச்சிகள், எதிர்வரும் வருடங்களிலும் தொடரும்' என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குர்ஆனிய செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்காக, மக்காவிலும் மதீனாவிலுமுள்ள ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி அலுவலகத்தில் இதற்கான நிரந்தர செயலகமொன்று நிறுவப்பட வேண்டும்' என்று அவர் ஆலோசனையும் வழங்கினார்.
|