சமுகம்குர்ஆன்-ஹதீஸ் ஆய்வுகள், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் பாரசீக மொழி ஆகியன பல்கலைக்கழகத்தினால் இணையத்தினூடாக வழங்கப்படவுள்ள மூன்று பிரதான கற்கைத் துறைகளாகும்.

நுழைவுப் பரீட்சையில் சித்தியடைவோர் குறிப்பிட்ட கற்கைநெறியில் பயில்வதற்கான அனுமதியைப் பெறுவர்.

மத்திய ஈரானின் புனித கும் நகரில் தனது துலைமையகத்தைக் கொண்டுள்ள அல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம், ஈரானின் உயர்கல்வி நிறுவனமாகும். அது, இஸ்லாத்தையும் அதனுடன் தொடர்புடைய விடயங்களையும் கற்பதற்கு எதிர்பார்க்கும் ஈரானியர் அல்லாத முஸ்லிம்களுக்கான பல கிளைகளை உலகில் கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு www.almustafaou.com எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்

 

குர்ஆனிய ஆய்வுகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையம் குர்ஆன் ஈ-நகரம்

'குர்ஆன் இலத்திரனியல் நகரம், அல்குர்ஆன் தொடர்பான ஆய்வுகளுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நிலையமாக விளங்கும்' என, ஈரானின் ISESCO தேசிய ஆணைக்குழுவின் அறிஞர் அப்பாஸ் பயாத் தெரிவித்தார்.

அவரது கூற்றின் பிரகாரம், இந்நிலையம் அல்குர்ஆனிய செயற்பாடுகளையும் அதனுடன் தொடர்புடைய அரபு மொழிப் போதனையையும் வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், ISESCO ஏனைய விடயங்களை விட இதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.

ஈரான் மாணவர் குர்ஆனிய நடவடிக்கை நிறுவனம் முன்மொழிந்த, குர்ஆன் ஈ நகரம் எனும் இவ்வெண்ணக்கருவை தேசிய ஆணைக்குழு வரவேற்றதன் மூலமாக இதற்கு இவ்வாறானதொரு முக்கியத்துவம் கிடைத்துள்ளது' என அப்பாஸ் பயாத் இக்னாவுக்குத் தெரிவித்தார். 'நாம் இந்த எண்ணக்கருவை ஆணைக்குழுவில் விருத்தி செய்துள்ளோம். அத்துடன் இம்மாணவர் அமைப்புடன் அது தொடர்பாக பேசியுமுள்ளோம். எவ்வாறாயினும், இணையத்தளத்தில் செயற்படுத்தும் குர்ஆன் ஈ நகரத்திற்கான மாதிரியொன்று பற்றிய கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக சர்வதேச மாநாடொன்றைக் கூட்டுவதனூடாக இதனை சாத்தியமுள்ள ஒன்றாக மாற்ற முடியும்' என மேலும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'அம்மாநாடு, அடுத்த வருடம், ஈரானிலுள்ள ஐளுநுளுஊழு இன் கலாசாரப் பிரிவின் ஒத்துழைப்புடன், ஜிஹாத் பல்கலைக்கழகத்தினால் ஈரானில் நிச்சயமாக நடத்தப்படும்' என்றார்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 next